ஒரு பொண்ணு மனசு உங்களுக்கு புரியாது!
kamakathaikal tamil நான் வினோ, கல்லூரி இறுதி ஆண்டு மாணவன். என் அப்பாவின் நெருங்கிய நண்பரின் மகள் தான் வித்யா. இருவரும் தொழில்முறை பங்குதாரர்கள் ஒரு பகுதியில் பக்கத்து தெருவில் தான் குடியிருந்தோம். அதனால் நான் அடிக்டி வித்யாவின் வீட்டு போவேன். வித்யாவும் என் வீட்டுக்கு வந்து செல்வாள். அப்போது நான் பிபிஏ மூன்றாவது படித்தேன். வித்யா பிபிஏ முதல் ஆண்டில் சேர்ந்தாள். ஒரே பாடப்பிரிவு என்பதால் அடிக்கடி சந்தேகம் கேட்க என் வீட்டுக்கு வந்து விடுவாள். சிறு வயதில் இருந்து ஒன்றாக விளையாடியவர்கள் என்பதாலும், இருவர் வீட்டிலும் நெருக்கம் என்பதாலும் யாரும் எங்களை எந்த சந்தேக பார்வை கொண்டும் பார்த்தது இல்லை. பள்ளி பருவத்தில் 8ம் வகுப்பு வரை ஒருவரையொருவர் சீண்டி விளையாடினாலும் 9ம் வகுப்பு வரும்போதே ஏற்பட்ட பாலியல் மாற்றத்தினால் இருவருக்குள்ளும் சீண்டி விளையாடும் நெருக்கம் குறைய ஆரம்பித்தது. பெண்களுக்கே உரிய கூச்ச உணர்வும் அவளை கொஞ்சம் தள்ளி நின்றே பேச வைத்தது. ஆனால் அதெல்லாம் பத்தாம் வகுப்பு தாண்டியது அந்த தயக்கங்களும் உடைந்து போனது. ஆனால் ஒரு வித ஈகோ ஆட்கொண்டு இருவரும் வார்த்தைகளால் சீண்டி வம்புக்கு இழுக்க ஆரம்பித்தோம். வித்யா பிளல் 1 படிக்கும்போது நான் கல்லூரிக்குள் நுழைந்து விட்டதால் அப்போது வித்யா மீது எனக்கு இருந்த பார்வையும் மாறிப்போனது. பொதுவாக ஸ்கூல் வயது வரைக்கும் தான் பசங்க என்கிற கணிப்பு இருக்கும், கல்லூரிக்குள் நுழைந்துவிட்டாலே அந்த அடல்ட், வாலிபன் என்கிற காளையின் துள்ளலும் சேர்ந்து நடை, உடை பானையில் முறுக்கி கொள்ள வைக்கும். அப்போது 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்த போது வித்யாவின் மார்க்கை நான் தான் நெட்டில் பார்த்து சொன்னேன். அப்போது அவள் என் வீட்டிற்கு வந்து இருந்தாள். அவள் வருவதற்கு முன்பே அவள் ஹால் டிக்கெட் நம்பரை அவள் அப்பா எஸ்எம்எஸ் பண்ணிவிட்டதால் நான் அவள் மார்க்கை குறித்து வைத்து கொண்டு, அவளிடம் சீண்ட தொடங்கினேன். ”வாங்க வித்யா மேடம். என்ன இந்த பக்கம். பொதுவா இப்படி காலையிலேயே வரமாட்டீங்கிளே.. ?” ”ஆமா…பெருமாள் கோயிலுக்கு பிரசாதம் வாங்க போனேன். அங்க ஒருத்தர் என் பங்கையும் சேர்த்து எனக்கு முன்னாடி வாங்கிட்டு வந்துட்டதாக சொன்னாங்க. அதை வாங்க தான் வந்தேன்?” ”ஓ பெருமாள் கோயில் பிரசாதம் தான் வாங்க வந்தீங்களா…நான் ஏதோ இன்னைக்கு ரிசல்ட்ல நல்ல மார்க் வாங்க ஆசீர்வாசம் வாங்க தான் வந்திருக்கீங்கனு நினைச்சேன்?” ”பெருமாளுகிட்டே தான் ஆசீர்வாதம் வாங்கமுடியும். அங்க பிரசாதம் வாங்க வர்றவங்க கிட்டேயுமா வாங்கமுடியும். ஆல்ரெடி பெருமாள் கிட்டே வாங்கியாச்சு. முதல்ல ரிசல்ட்டை பார்த்து சொல்லுங்க சார்?” ”ஓ மார்கை பார்க்க ரொம்ப வேகமாத்தான் இருக்க போல இருக்கு…சரி சும்மாலாம் மார்க்கை பாத்து சொல்லமுடியாது…எவ்ளோ எதிர்பார்க்குறேனு சொல்லு…அப்போ தான் பாத்து சொல்லுவேன்” ”அது தெரிஞ்சா ஸ்டிரெயிட்டா நாளைக்கு ஸ்கூலுக்கு போயி மார்க் ஷீட்டை வாங்கிக்க மாட்டேனா?.. நானே டென்ஷன்ல இருக்கேன் ரொம்ப நோகடிக்காம ப்ளீஸ் மார்க்கை பார்த்து சொல்லுங்க. இல்லேனா நான் வெளியே பிரவுசிங் சென்டர்ல போயி நானே பாத்துக்கிறேன்” ”சரி சரி எல்லா மார்க்கும் வேண்டாம். எதிர்பார்க்கும் டோட்டலை மட்டும் சொல்லுங்க…டென்சன் இருந்தா தானே எக்சைட்மென்ட்?” ”அய்யோ…தெரியாம இங்க வந்துட்டேன். சரி சொல்றேன். ஆனா கிண்டல் பண்ணக் கூடாது. 450 க்கு உள்ளே தான்…அதுக்கு மேல சத்தியமா இருக்காது. போதுமா..இப்போ பாரு வினோ ப்ளீஸ்…பிரஷர் ஏறுது.. ?” நான் ஏற்கனவே வித்யாவின் டோட்டலை நோட் பண்ணி விட்டதால். அதில் ஒரு மார்க் கூடி 451 என்று இருந்தது. நான் உடனே இன்னும் சீண்ட நீனைத்து ”சரி ரெண்டு பேருக்கும் ஒரு சேலஞ்ச். நீ உன்னோட டோட்டல் 450 தாண்டாதுனு சொல்றே. நான் தாண்டும்னு நம்புறேன். அப்படி தாண்டிட்டா என்ன ட்ரீட்… ?” ”ஓ என் மார்கை பத்தி என்கிட்டயேவா…நான் ரெடி. 450 யே நான் ஒரு கவுரவத்துக்கு தான் சொன்னேன். சத்தியமா அந்த லெவலை தாண்டவே தாண்டாது. பார்க்கலாம்?” ”ஓகே அப்போ 449 வரைக்கும் வந்துட்டா நீ எனக்கு ட்ரீட் தர வேண்டாம் அதுக்கு மேல ஒரு மார்க் வந்தாலும், ஐ மீன் 450 வந்தாலும் நீ எனக்கு ட்ரீட் கொடுக்கணும் ஓகேவா?” ”ஷ்யூர் இது நல்ல டீல்..449க்கு மேல எனக்கு வரவே வராது..ரெடி டூ சேலஞ்ஜ்.. ?” நான் ஹாப்பியாக சிஸ்டத்தில் ரிசலட் வெப்சைட்டை பிரவுஸ் செய்து அவள் மார்க்கை காட்டியபோது அவள் முகம் சந்தோஷமடைந்தாலும் கொஞ்சம் ஷாக் ஆனது… ”ஹே…நான் நம்பமாட்டேன்..எங்கே ஸ்கிரீனை ஷூம் பண்ணி காமி…வாவ்..ஓ மை காட்…ஜஸ்ட் 2 மார்க்ஸ்….என்னால நம்பவே முடியல..ஹே நிஜமா சொல்லு உனக்கு எப்படி என் ஹால்டிக்கெட் நம்பர் தெரியும். டேடிக்கு தான் தெரியும் டேடியும் ஊர்ல இல்லை?” ”என்ன கிண்டலா அதென்ன எந்த சேலஞ்ல பசங்க ஜெயிச்சாலும் நம்பவே மாட்டேங்குறீங்க. நீ ரிசல்ட் பாக்க வரவேனு எனக்கு என்ன ஜோசியமா தெரியும். அப்படியே உங்க டாடி கொடுத்தாலும் ஆல்ரெடி பாத்துட்டு அவருக்க சொல்லி இருப்பேன். அவர் உனக்கு போன் பண்ணியிருப்பாரு. இப்போ என்கிட்டே சேலஞ்ல தோத்துட்டு சமாளிக்காதே..உன் ட்ரீட்டும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம். இதுக்கு தான் அந்த சின்ன கலைவாணர் அன்னைக்கு சொன்னாரு.. ” ”சரி சரி இந்த சின்ன விஷயத்துக்க ஏன் அந்த காலத்து ஆசாமிகளை வம்புக்கு இழுக்குறே.. ?” ”ஓ அதுவே உனக்கு தெரியாதா..சின்ன கலைவாணர்னா நம்ப சிரிப்பு நடிகர் விவேக் மா.. ?” ”ஓ அவர் சிரிக்கவச்சா சிரிப்பேன். அதுக்காக அவரு பேரை தவிர இதெல்லாம் எனக்கு தேவையா… ?” ”சரி சரி என்ன ட்ரீட்வேணும் சொல்லித் தொல…டைம் ஆகுது பிரண்ட்ஸ் வீட்டுக்கு போகணும்?” ”அதெல்லாம் இங்கே சொல்லமுடியாது வா.. ?” என்ற பைக்கில் வித்யாவை பிக் அப் செய்து கொண்டு, மாலுக்கு பறந்தேன். அதற்குள் அவளுக்கு கிளாஸ்மேட்ஸ்களிடமிருந்து தொடர்ந்து போன் மேல் போன் வந்து கொண்டிருக்க, அவள் மார்க் 451 யை பெருமையாக சொல்லி, அதை கொண்டாட”ஒரு 420 கூட செலபிரேட் பண்ண போய்கிட்டு இருக்கேன்?” என்றாள். ”ஹே என்னடி நான் உனக்கு 420யா.. ? அவ்ளோ கொழுப்பு கூடி போச்சா. இருடி இன்னைக்கு ட்ரீட்ல உன் பர்சை காலி பண்ணி பீஸா ஷாப்ல மாவு பிசைய விடுறேன்” ”ஹாஹா…நாங்களாம் மோடிக்கு முன்னாடியே கேஷ்லஸ் டிரான்ஸுக்கு மாறிட்டோம்…மாவு என்ன பீஸா சென்டரையே விலைக்கு வாங்கி உன்னை பில் கவுண்டர்ல உட்கார வச்சு, எனக்கு பில்போட வைக்க முடியும் பாக்குறியா?” ”ம்ம்…2 மார்க் கூட வாங்கினதுக்க இந்த துள்ளு துள்ளுறியே..நல்லவேளை நீயெல்லாம் 490க்கு மேல வாங்கினா…கபாலி பட விளம்பரம் மாதிரி விமானத்துல உன் படத்தோட மார்கையும் போட்டு உலகத்துக்கே வித்தை காட்டுவே போல…தப்பிச்சுதுடா இந்து உலகம்?” ”ம்ம்..போதும்…ரோட்டை பாத்து ஓட்டு…கண்ணா எப்படியோ சொன்ன மார்க்கை வாங்கினோமா இல்லை. ரெண்டு கூடத்தான் வந்திருக்கு.. நல்லவேளை குறைய இல்லேனா நீ குறைசொல்லி கொன்னுடுவே.. ” மாலில் பீஸா சென்டருக்குள் ஜோடி ஜோடியா உட்கார்ந்து ரோமான்டிக் கதை பேசி பீஸாவை கொரித்துக் கொண்டிருக்க அந்த சூழல் எங்கள் இருவரையும் கொஞ்சம் ரொமான்ஸ் மூடுக்கு மாற்றியது. உள்ளே நுழைந்ததுமே வித்யா என் கைகளை இறுக கோர்த்துக் கொண்டாள். நானும் அவள் கைகளை இறுக பற்றி கொண்டு ஜோடியாக ஒரு டேபிளில் அமர்ந்து பீஸாவை ஆர்ட்ர் செய்து ருசித்தோம்.