கண் மூடி சுகத்தை அனுபவித்தாள்
வணக்கம். இது எனது முதல் கதை. இதனை நீண்ட கதையாக கொண்டு செல்ல விரும்புகிறேன். சில உண்மை சம்பவங்களுடன் கற்பனை கலந்து எழுதியது. தங்களது ஆதரவை வழங்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி. கதைக்குள் செல்வோம். நான் ரவி அரசு. ரவி என்றே அழைப்பார்கள். திருச்சியில் தங்கி அரசு பணித்தேர்விற்கு படிக்கின்றேன். நான் ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்து வந்தேன். அந்த பெண்ணும் காதலித்து வந்தாள். அரசு வேலை பெற்றால் தான் அவர்கள் வீட்டில் திருமணம் செய்து வைப்பதாக சொன்னதால் நான் இங்கு நண்பர்களுடன் அறை எடுத்து தங்கி படித்து வருகின்றேன். நான் படிக்கும் மையத்தில் படித்தவள் இமையா. ரொம்ப அழகு என்று சொல்ல முடியாது. ஆனாலும் பார்க்கும் படி இருப்பாள். சில நாட்கள் அவளை எதேச்சையாக பார்த்தேன். பேசனும் போல இருந்தது. எப்படி பேசுவது என்று தெரியவில்லை. சில நாட்களுக்கு பிறகு தான் தெரிந்தது அவள் எனக்கு பின்னால் சைடில் உட்கார்ந்து தான் படித்து வருகிறாள் என்று. படிப்பில் நான் கெட்டி. அவளோ சுமார்ர்ர். அவளின் மீது எனக்கு ஒரு ஈர்ப்பு வந்தது. சில நாட்கள் அவளை ரசித்து கொண்டே படித்து கொண்டிருந்தேன். ஒருநாள் மிகுந்த தைரியத்தை வரவைத்துக்கொண்டு பேச தொடங்கினேன். நான் : . . கல்லூரியில் படிச்சிங்களா. இமையா : இல்லையே. ஏன் கேட்குறீங்க. நான் : இல்லை. உங்கள பார்த்த மாதிரி இருக்கு. அதான் என்று இழுத்தேன். அவள் சரி என்று அங்கிருந்து சென்றுவிட்டாள். அப்போது ஒன்றை நான் கவனிக்கவும் தயங்கவில்லை. அவளுடன் இருந்தவள் அவள் தோழி சுபா. சுபா இமையாவை விட அழகு. மேலும் செம்ம கட்டை. நாட்கள் செல்ல சில நேரங்கள் பார்த்து சிரித்து கொள்வோம். அவ்வளவு தான். ஆனால் எனக்கு தினமும் அவள் நினைப்பு தான். வாரம் ஒரு நாள் எங்கள் பயிற்சி மையத்தில் விடுமுறை அளிப்பார்கள். அதே போல் ஒரு நாள் விடுமுறையில் கணிதம் சிறப்பு வகுப்பு நடத்துவதாகவும் விருப்பம் உள்ளவர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம் என்று தெரிவித்தார்கள். நான் எனது ரூம் பசங்க சரக்கு அடித்து என்ஜாய் பண்ணுவதால் வகுப்பிற்கு சென்றேன். தாமதமாக சென்று கடைசியில் அமர்ந்திருந்தேன். 1. 30 மணியளவில் கணிதம் வகுப்பு முடிந்தது. அப்போது என்னை யாரோ பார்ப்பது போல் இருந்தது. அவள் கண்கள் மட்டும்தான் தெரிந்தது. நானும் ஆர்வமாய் கவனித்த பிறகு அருகில் வரத்தான் தெரிந்தது. அவள் சுபா என்று. நான் நன்றாக படிப்பதால் அவள் என்னிடம் அவள் படிப்பதற்கு உதவி செய்யுமாறு கோரி என் போன் நம்பர் வாங்கினாள். நானும் அவளும் சிறிது பேசிவிட்டு கிளம்பினோம். அன்று இரவே வாட்சப் மெசஜ்சில் சுபா. சுபா : ஹாய் நான் : ஹாய். யாரு நீங்க. சுபா : இமையா பிரண்டு. மதியம் நம்பர் வாங்குனேன்ல. நான் : ஓகே ஓகே. என்று சிறிது படிப்பு பற்றி பேசிவிட்டு பெர்சனல் விசயத்திற்குள் நுழைந்தோம். சுபா : என்ன படிச்சிருக்க. எந்த இயர். நான் : இன்ஜினியரிங் மெக்கானிக்கல். அண்ணா யுனிவர்சிடி என்றேன். சுபா : நானும் தான் அங்க படிச்சேன். நான் : இன்ஜினியரிங் கா நீங்க. சுபா : இல்லை MBA. 2014-16 நான் : 2012 – 2016 சுபா : உனக்கு அன்பு தெரியுமா. ஹாக்கி டீம் கேப்டன். அவன் என்னோட பிரண்ட். அவன் விளையாடும் போத்ல்லாம் நான் பார்க்க வருவேன். நான் : ரொம்ப நல்லா தெரியும். நானும் புட்பால் பிளேயர். சோ. அண்ணாவ ரொம்ப நல்லா தெரியும். சுபா. : அது சரி. நீ இமையாவ லவ் பண்றியா. நான் : இல்லை. எனக்கு அவங்கள பிடிக்கும். அதுனால பார்ப்பேன். பேசுவேன். சுபா : அப்ப என்ன பிடிக்காத. நான் : பிடிக்கும். நம்ம காலேஜ் சீனியர் நீங்க. சுபா : ஆமா தம்பி. அவளும் உன்ன பிடிக்கும்னு சொன்னா தம்பி. நான் : அப்படியே. தாங்க்ஸ் கா. நான் உற்சாகத்தில் மிதக்க தொடங்கினேன். சுபா : எதுக்கு. டேய்ய்ய்ய. நான் : அக்கா. ஜஸ்ட் பிரண்ட். அவ்ளோதான். சுபா : அவள் யாரையோ லவ் பண்றா டா. அவன் வேற கிறிஸ்டியன் டா. இவங்க வீடல இவ ஒரே பொண்ணு. அதுனால இவஙக ஒத்துக்கல. ஆனால் இவ அவனைதான் கல்யாணம் பண்ணுவேனு அடம்புடிக்குற. நான் மனதிற்குள் வேதனைப்பட்டேன். இப்பதான் என்னை பிடிக்கும்னு சொன்னதுல ஜாலிய இருந்த நான இப்ப துவழ ஆரம்பிச்சேன். அத்துடன் போனை போட்டுவிட்டு தூங்கிடேன். மறுநாள் சுபா அக்காவிடம் இமையா போன்நம்பர் வாங்கி பேச தொடங்கினேன். அவள் தினமும் பஸ்ஸில் வரும்போதும் கிளாஸ் ல இருக்கும் போது மட்டும்தான் பேசுவாள். வீட்டிற்கு போய்ட்டா. ஆன்லைன் கூட வரமாட்டாள். இப்படியே சில நாட்கள் போய்ட்டு இருந்தது. அப்போது கல்யாணம் ஆன சிந்து அவங்க குரூப்போடு சேர்ந்து எனக்கும் அறிமுகம் ஆனார்கள். அவங்க கொஞ்சம் சீனியர். 30 வயது இருக்கும். சிந்துவும் தம்பி தம்பி என்று உரிமையுடன் பழகுவாள். அவ்வப்போது எனக்கும் இமையாவுக்கும் நடக்கும் சண்டையில் சிந்து எனக்கு தான் சப்போர்ட் பண்ணுவாள். இப்படியே நாட்கள் போக போக குரூப் -4 தேர்வு அறிவிப்பு வெளியாகி அனைவரும் படிப்பில் கவனம் செலுத்தி படித்து கொண்டு இருந்தோம். தேர்வு முடிந்து நான் பாஸ் பண்ணிடுவேனு எல்லாரும் சொன்னாங்க. ஆனால் எனக்கு தெரியும் நான் சில தவறுகள் செய்து சொதப்பிவிட்டேன் என்று. எனக்கு வேலை கிடைக்கும் என்று நம்பிக்கை இல்லை. அப்படியே சில நாட்கள் சென்றது. ஒருநாள் அவளும் சுபாவும் டிரெஸ் தைக்குற் கடைக்கு சென்றார்கள். அப்போது சுபா உள்ளே சென்று டிரஸ் பார்க்க சென்றாள். நானும் இமையாவும் வெளியில் வரவேற்பு ஹாலில் அமர்ந்தோம். அப்போது பேசிட்டு இருக்கும் போதே அவள் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டேன். அவளும் கன்னத்தை துடைத்துகொண்டு இப்படிலாம் பண்ணாத என்று மட்டும் சொன்னால். மேலும் தான் லவ் பண்ணுவதாகவும் இனி அப்படி பண்ணாதனு சொன்னா. எனக்கு தோணுச்சு பண்ணேன். உனக்கு தோணுச்சுனா நீயும் பண்ணிக்கோ என்று சொல்லிவிட்டு நக்கலாய் சிரித்தேன். அவளுக்கு என்னை ரொம்ப பிடிக்கும். ஆனால் அவள் இன்னொருவனை லவ் பண்ணுவதால் மனது இடம் கொடுக்கவில்லை என்று அவள் மனதை புரிந்து கொண்டேன். அவள் லவ்வர் பேர் விஜய். வெளிநாட்டில் வேலை செய்கிறான். அதனால் இமையாவுடன் நெருக்கம் இல்லை. ஒருநாள் மாலை சீக்கிரம் வகுப்பு முடிந்தது. இமையா ஊருக்கு லேட்டாதான் பஸ் இருக்கும். அதனால் அவளை கோவில் போலாம் என்று அழைத்தேன். அவளும் வந்தாள். உச்சி புள்ளையார் கோவில் சென்று நிறைய போட்டோ எடுத்தேன். அவள் தோழில் கை போட்டு நெருக்கமான போட்டோ கூட எடுத்தேன். அவள் என்னை தடுக்கவில்லை. இது அவள் என்னை காதல் செய்கிறாள என்ற சந்தேகத்தை வர வைத்தது. நானும் அவளை மட்டுமே நினைத்து கொண்டிருந்தேன். மறுநாள். வகுப்பில். இமையா : ரவி உன் போன் குடு. நான் : ஏன்? இமையா : குடு டா. நான் : இந்தா. சிறிது நேரம் கழித்து. இமையா : இந்தா. (அவள் முகத்தில் சிறிது வலியுடன் கூடிய ஏக்கம்) நான் : எங்க நாம போட்டோ காணோம். இமையா : நான் டெலிட் பண்ணிட்டேன். நான் : ஏன். அதுக்குனு எல்லா போட்டோவும் டெலிட் பண்ணுவியா. இமையா : நான் இன்னொருத்தன லவ் பண்றேன். அதுனால நாம நெருக்கம எடுத்த போட்டோ நினைச்சு நேத்து நைட்லாம் மனசு கஷ்டமா இருந்துச்சு. அதுனால தான் டெலிட் பண்ணேன். நான் : இப்ப நான் கஷ்டப்படுறேன். நான் அவளிடம் கோபப்பட்டு சில நாட்கள் பேசவே இல்லை. ஆனால் தினமும் பார்த்துவிடுவேன். அவள் பார்க்காத போது மட்டும். அவளும் என்னிடம் சில நாட்கள் பேசவில்லை. ஆனால் மீண்டும் அவள் பேச தொடங்கினால்.