காதல் என்பது எதுவரை?
Tamil Kamakathaikal
ஆனால், ஒருநாள் தான் அவனால் என்னிடம் பேசாமல் இருக்க முடிந்தது. அடுத்த நாள் மெசேஜ் அனுப்பினான். நான் பதில் அனுப்பவில்லை. கால் செய்தான். அட்டென்ட் செய்யவில்லை. பலமணி நேரம் கழித்து மெசேஜ் அனுப்பினேன். உடனே I LOVE YOU என்று ஒரு மெசேஜ் முழுவதும் டைப் செய்து பதில் அனுப்பினான். “இனிமேல் நான் அதிகம் தொல்லை செய்ய மாட்டேன், என்னிடம் பேசாமல் மட்டும் இருக்காதே” என்று அடுத்த மெசேஜ். “நான் நேற்றிலிருந்து சாப்பிடவில்லை” என்று அடுத்த மெசேஜ். என்னால் இவைகளை படித்தவுடன் சகிக்க முடியவில்லை. மீண்டும் கோபத்தில் அவனுக்கு பதில் அனுப்பவில்லை. இதுவே வாடிக்கையானது… ஒருநாள் டவுனில் எதேச்சையாக அவனை பார்த்தும் பார்க்காதது போல சென்றுவிட்டேன். அவனும் என்னை கவனித்திருக்கிறான். அந்த இரவில் “இனிமேல் உன் முகத்திற்கு நேராக எப்போதும் வரமாட்டேன். நீ எங்கும் தைரியமாக செல்லலாம்” என்று ஒரு மெசேஜ் அனுப்பினான். அதன் பிறகு முன்பு போல மெசேஜ் அனுப்புவதில்லை, கால் செய்வதில்லை. நானும் அவற்றை எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் நான் இப்படி ஒட்டுமொத்தமாக கைகழுவ நினைக்கவில்லை. சரி, விட்டால் போதும் என்று நானும் இருந்து விட்டேன். இதற்கிடையே அவன் முதுகலை பட்டப்படிப்பிற்கு சேர்ந்தான். நான் ஒரு கம்ப்யூட்டர் சென்டரில் ப்ராஜெக்ட் செய்து கொடுக்கும் வேலையில் சேர்ந்தேன். பக்கத்து ஊர் என்பதால் சில நேரங்களில் நேருக்கு நேராக பார்க்கும் படியான சந்தர்ப்பங்கள் அமைந்தது. நான் அவன் முகத்தை பார்த்தாலும் அவன் என்னை பார்க்காமல் சென்றான். சில நேரங்களில் அவனுடைய நண்பர்கள் என்னிடம் “ஏன் சண்டையா?” என்று கேட்க ஆரம்பித்தார்கள். “ஆமா சும்மா சின்ன பிரச்சனை” என்று சமாளித்துச் செல்வேன். டவுனில் என்னிடம் முகத்தை திருப்பி செல்வது முதலில் எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. பின்னர், “உனக்கே அவ்வளவுனா எனக்கு எவ்ளோ இருக்கும்” என்று ஈகோ காட்ட ஆரம்பித்தேன். எனக்கும் நியாலுக்குமான உறவு கிட்டத்தட்ட 4 மாதங்கள் தான். முடிந்து விட்டது. எல்லாம் முடிந்து விட்டது. மாதங்கள் பல கடந்தன…. வேறு பல நண்பர்களின் நட்பு, செக்ஸ் என்று வாழ்க்கை போக ஆரம்பித்தது. நட்பு எல்லாம் செக்ஸ் செய்யும் வரை தான். மேட்டர் முடியும் வரை ஓயாமல் பேசுவது, பின்னர் காரியம் முடிந்ததும் காணாமல் போய்விடுவது என்று தான் நண்பர்கள் கிடைத்தார்கள். பலரும் ஆசை தீர என் ஆணுறுப்பையும், உதட்டையும், உடலையும் அனுபவித்து விட்டு சென்றார்கள். எனக்கு யாரையும் பிடிக்கவில்லை. நான் விரும்பி அனுபவிக்க எனக்கு யாரும் கிடைக்கவில்லை. யாரிடமும் உண்மையான அன்பும், நட்பும் கிடைக்கவில்லை.