மேட்சிங்…மேட்சிங்..!
SEX STORIES TAMIL நான் சிவா. பள்ளி முதல் கல்லூரி வரை எனக்கு மிகவும் நெருங்கிய நண்பன் ராமன். சில கேலி கிண்டலுக்காக ரெண்டு பேரும் சேர்ந்து தெருவில் போகும் போது சிவராமன் என்று ஒரே நபராக அழைப்பார்கள். அந்த அளவுக்கு நெருக்கம். இருவர் வீட்டிலும் கூட இதே போல் அழைத்து பழகி விட்டார்கள், பெரும்பாலும் நான் அவன் வீட்டிலோ அவன் என் வீட்டிலோ தான் இருப்போம். ஒருடல் ஈருயிராக எங்கள் நட்பு பயணம் கல்லூரி வாழ்விலும் தொடர்ந்து கொண்டு இருந்தது. ராமனுக்கு ஒரு தங்கை உண்டு பெயர் மோகனா. எங்களை விட இரண்டு வயது தான் சிறியவர். நாங்கள் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்தபோது அவள் முதல் ஆண்டில் அடியெடுத்த வைத்துவிட்டாள். அவள் வீட்டில் பெற்றோர் ராமனிடம் தங்கையை கல்லூரிக்கு கூட அழைத்த போ என்று சொல்வார்கள். ஆனால் அவனுக்கு தங்கையை கூட அழைத்துச் செல்ல வெட்கம். ரோட்டில் பசங்க கிண்டல் செய்வார்கள், கோபம் வரும் என்று யோசித்துக் கொண்டு மறுத்துவிடுவான். இதனால் அவன் வீட்டில் அடிக்கடி அவனுக்கும் தங்கைக்கும் சண்டை நடக்கும். பின்பு இதை கேள்விபட்டு நானும் ராமனிடம் சொன்னபோது, ”போடா என்னால முடியாது வேணா நீ அவளை கூட்டிட்டு போ” என்று முகத்தில் அடிப்பது போல் சொல்லிவிட்டான். உடனே ராமனின் பெற்றோர்களும் என்னிடம் ”எப்படியும் இந்த ஒரு வருஷம் தான் உங்க கூட அவ வர முடியும். அடுத்த வருஷம் நீங்க காலேஜ் முடிச்சி வெளியே போயிடுவீங்க. அதுக்குள்ள மோகனாவுக்கு வெளிப் பழக்கம் வந்து கொஞ்சம் தைரியம் வந்துடும். அத சொன்னா உன் ஃபிரண்ட் சிவா புரிஞ்சுக்க மாட்டேங்குறான். நீயாச்சும் மோகனாவை கூட்டிட்டு போப்பா ?” என்று சொல்ல நானும் ஒத்துக் கொண்டேன். தினமும் காலையில் நான் ராமன் வீட்டிற்கு போகும் போது, அவன் இருந்தாலும் நான் வந்தவுடனே எங்கே தன்னையும் கூட வரச்சொல்லுவேனோ என்று பயந்து அவசர அவசரமாக கிளம்பிச் சென்று விடுவான். நானும் மோகனா கிளம்பும் வரை பொறுமையாக காத்திருந்து அவளை கூட்டிச் செல்வேன். ராமன் அப்பாவும், அம்மாவும் என்னை அன்போடு உபசரித்து சூடாக காலை காபியை கொடுத்து இருவரையும் கல்லூரிக்கு வழியனுப்பி வைப்பார்கள். மாலையும் மோகனாவை அவள் வீட்டில் விட்டுவிட்டு தான் காபியை பருகிவிட்டு என் வீட்டிற்கு செல்வேன். முதலில் ஒரு அண்ணன் தங்கைக்கு செல்லும் கடமையாக தான் கருதிக் கொண்டு என் நண்பன் ராமனின் தங்கை மோகனாவை கல்லூரிக்கு கூட்டி செல்வதும், கூட்டி வருவதும் செய்து கொண்டு இருந்தேன். மோகனாவும் கொஞ்ச நாள் நல்ல தங்கையாக தான் வந்து கொண்டிருந்தாள். சில கல்லூரி நண்பகள் ராமன் முன்பே ”டே மச்சம் டா மாப்பிள்ளை.. மச்சானோட முழு சம்மதத்தோட தங்கச்சிய தள்ளிட்டு வர்றே, போறே…மஜா தான் போ…அனுபவி டா ராஜா அனுபவி” என்று கேலி லாலி பாட ஆரம்பித்தனர். அதில் எந்த தவறும் இல்லை. அவர்கள் இடத்தில் நான் இருந்தாலும் இதோ போல் தான் கிண்டலடிப்பேன் என்பதால் அமைதியாக சிரித்து மழுப்பி விடுவேன். ஆனால் ராமன் மிகவும் டென்சஷாகி கத்துவான். ”பாத்தியா சொன்னேன்ல,..இதுக்கு தான் அவளை கூட்டிட்டு வரமாட்டேனு சொன்னேன். இதெல்லாம் எப்படி டா வீட்ல சொல்லி புரிய வைக்க முடியும்.. ?” ”புரியுது டா. வேணா நான் மோகனா இது பத்தி தனியா சொல்லி புரியவச்சு நாளையில இருந்து அவளை தனியா காலேஜுக்கு வரச்சொல்லிடட்டுமா” ”அடப்பாவி..நீ மட்டும் மோகனாவை கூட்டிட்டு போகலைனா, அப்புறம் டெய்லி வீட்ல பூகம்பம் வெடிக்கும். இப்ப நீ கூட்டிட்டு போறதுனால மோகனாவும் அமைதியாகிட்டா, வீட்லயும் நிம்மதியா இருக்காங்க…என்னால ஏன் கூட்டிட்டு போகமுடியாதுனு இந்த காரணத்தை சொன்னேன்” ”டே யார் சொல்லி என்ன ஆகப்போகுது. அவ என்ன கேர்ள் பிரண்டா நம்ப தங்கச்சி டா.. நாம் எந்த காலத்துல இருக்கோம். சொல்றவன் ஆயிரம் சொல்லுவான் கண்டிப்பா வீட்ல அக்கா, தங்கச்சியை கூட்டிட்டு வெளியே போகவேண்டிய சூழ்நிலை இருக்கிறவன் கிண்டல் பண்ண மாட்டானுங்க. இதெல்லாம் நாம கண்டுக்க கூடாது டா.. இதுக்கே கூச்சபட்டா நாளைக்கு மேரேஜ் ஆகி வைஃபை எப்படி தைரியமா வெளியே கூட்டிட்டு போவ? இதெல்லாம் இந்த காதுல வாங்கி அந்த காதுல விட்டுட்டு நாம வேலைய பாத்துட்டு போய்கிட்டே இருக்க வேண்டியது தான் மச்சான்” ராமன் என் கருத்தில் அப்போது உடன்படாமல் தலையாட்டினாலும் கடைசியாக சொன்ன மச்சான் என்கிற வார்த்தை அவனுக்கும் கொஞ்சம் உறுத்த ஆரம்பித்தது. அதற்கு முன்பு ஆயிரம் முறை ராமனை மச்சான..மச்சான் என்று நான் கூப்பிட்டு பழகி இருந்தாலும், இப்போது அவன் தங்கையை நான் அழைத்து போயி, பசங்க பண்ணிய கலாட்டாவில் அவனுக்க மச்சான் என்கிற வார்த்தை, வேறு ஒரு தொனியில் அர்த்தம் கொடுத்து, அவன் மனதுக்கும் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்ததை நான் புரிந்து கொண்டு அதற்கு பின் ராமனை மச்சான் போட்டு பேசுவதை குறைத்து கொண்டேன். இது எனக்கு தேவையில்லாத வேலை தான் என்றாலும் தலையை கொடுத்தாகி விட்டாது எப்படியாவது மோகனாவை விரைவில் கன்வின்ஸ் செய்து தனியே கல்லூரிக்கு போய், வர வைத்துவிடவேண்டும் என்று அவளிடம் பக்குவமாக பேச ஆரம்பித்தேன். ஆனால் அவள் பார்வையோ அண்ணன் முறை என்பது கொஞ்சம் கொஞ்சமாக மாறி ஒரு பாய்ஃபிரண்டை போல என்னை பார்க்க ஆரம்பித்தான். அண்ணன் ராமன் மச்சான் உறவை உதறவைத்தான், ஆனால் தங்கை மோகனாவோ அண்ணன் உறவை உதறவைத்து ஒரு லவ்வரை போல பார்க்க ஆரம்பித்து ஆனாலும் பேரும் சொல்ல முடியாமல் தவித்தபடி, ”சிவா ஜி…இந்த டிரஸ் எப்படி இருக்கு. எனக்கு எப்பவும் லைட் கலர் ஷேட்ஸ் பிடிக்காது ஆனா நீங்க எப்பவும் லைட் ஷேட்ஸ் தான் போடுறீங்க. சோ நானும் மாறிட்டேன். இப்ப ரெண்டு பேருமே மேட்சிங்…மேட்சிங்.. ?” என்று ஆரம்பித்தாள். மோகனா வெகுளியாகத் தான் பேசுகிறாளா இல்லை வேறமாதிரியா என்று என்னால் அப்போதைக்கு யூகித்து கொள்ளமுடியாவிட்டாலும் அவளை தனியாக கல்லூரிக்கு போய்வர என் ஆலோசனையை ஆரம்பித்தபோது அவள் நானே எதிர்பாராமல் ஆவேசமாக, ”உங்களுக்கு என்னை கூட்டிட்டு போக பிடிக்கலையா? பிடிக்கலேனா ஃபிராங்கா சொல்லிடுங்க. உங்க கூட வரும்போது உங்க பெர்சனாலிட்டி பாதிக்க கூடாதுனு தான் உங்க டேஸ்ட்டுக்கு மாற டிரை பண்ணிட்டு இருக்கேன். ஆனா நீங்க அதை புரிஞ்சுக்காம என்னை கழற்றி விட்டுட்டு தனியா காலேஜுக்கு போறதை பத்தியே பேசுறீங்க..வேணா எங்க அப்பா அம்மா கிட்டே என் கூட்டிட்டு போக பிடிக்கலேனு சொல்லிட்டு நீங்க தனியா போங்க. நான் வேணா காலேஜ் போறதை நிறுத்திக்கிறேன்” நான் அதிர்ச்சியானாலும் அவளை அப்போதைக்கு சாந்தப்படுத்துவதற்காக ”நான் எப்போ உன்னை கூட்டிட்டு போகமாட்டேனு சொன்னேன். இப்போ நீ பழகினா தானே மோகனா நெக்ஸ்ட் இயர் நீ தனியா போகமுடியும்?” ”அதெல்லாம் அப்போ பாத்துக்கலாம் சிவாஜி, ஃபர்ஸ்ட் இயர் வெகேஷன்ல என்னை நீங்களே கூட்டிட்டு போயி பழக்கிவிடுங்க. இப்ப எதுக்கு எனக்க அந்த டென்ஷன்?” ”ஆஹா இவ காலேஜ் லீவுல வேற நம்பளை தனியா டிரைனிங்கு கூப்பிடுறாளே..சரி அவ சொல்றதும் சரி தான். இந்த வருஷம் முடிஞ்சா அவ எதுல போனா எனக்கு என்னை கவலை. எப்படியும் நாம காலேஜ் முடிச்சிட்டு இவ வீட்லயா காத்துகிடக்கபோறோம். அவ பேரண்ட்ஸ் கிட்டே வேற பொறுப்பு எடுத்தாச்சு போறவரைக்கும் போகட்டும்?” என்று ராமன் தங்கை மோகனாவை கல்லூரிக்கு கூட்டி சென்று, வீட்டுக்கு கூட்டி வந்து கொண்டு இருந்தேன்.