ராட்சசி – பகுதி 5
tamil sexstory அடுத்த நாள் காலை அசோக் கண்விழித்தபோது, அவனது தலைக்கடியில் இரண்டும், பக்கவாட்டில் இரண்டுமாய் நான்கு தலையணைகள் வைக்கப்பட்டிருந்தன. இரவு ஒரு மூலையில் கிடந்த அந்த போர்வை, இப்போது அவன் உடலை முழுவதுமாய் போர்த்தி, காலைக்குளிருக்கு இதமாக கதகதப்பை வழங்கிக் கொண்டிருந்தது. இரவில் பளிச்சென்று எரிந்த குழல்விளக்கு இப்போது அணைந்துபோயிருக்க, கண்ணை உறுத்தாத வெளிச்சத்தை வெளியிட்டுக் கொண்டிருந்தது இரவு விளக்கு ஒன்று..!! கண்விழித்ததுமே மனதுக்குள் ஒரு புத்துணர்வும் புதிதாய் விழித்துக் கொண்டதை அசோக்கால் உணர முடிந்தது. தலையை திருப்பி மணி பார்த்தான். ஏழரை என்று காட்டியது கடிகாரம்..!! அவனுக்கும் அன்றிலிருந்து ஏழரை ஸ்டார்ட் ஆகப்போகிறது என்பதை அறியாதவனாய், படுஉற்சாகமாகவே படுக்கையை விட்டு எழுந்தான். பாத்ரூமுக்குள் புகுந்தவன் கால் மணி நேரம் கழித்து, கமகமவென வாசனையாக வெளிப்பட்டான். வேறு உடைகளை பரபரவென அணிந்துகொண்டு அவனுடைய அறையை விட்டு வெளியேறினான். கிச்சனுக்குள் நுழைந்தான். பொங்கிய பாலின் கொதிப்பை அடக்குவதற்காக, குனிந்து ஸ்டவ் ரெகுலேட்டர் திருகிக் கொண்டிருந்த பாரதி, மகன் உள்ளே நுழைந்ததும் அவனை ஏறிட்டு புன்னகைத்தாள். “என்னடா.. பொழுது விடிஞ்சிருச்சா..??” “ம்ம்.. அரை மணி நேரத்துக்கு முன்னாடியே..!!” “நல்லா தூக்கமா..??” “செம தூக்கம்..!! தலை வச்சு படுத்தது என் மம்மி மடியாச்சே.. எந்த கவலையும் இல்லாம நிம்மதியா தூங்கினேன்..!!” அசோக் அன்பு வழிகிற புன்னகையுடன் சொல்ல, பாரதி பதிலேதும் சொல்லாமல் தன் மகனையே அமைதியாக பார்த்தாள். அந்தப் பார்வையில் ஒருவித பெருமிதம் மிகுந்திருந்தது. பிறகு ஸ்டவ் மீதிருந்த பாத்திரத்தை கைப்பிடி பற்றி தூக்கி, தயாராக எடுத்து வைத்திருந்த கப் ஒன்றில் பாலை ஊற்றினாள். அசோக் இப்போது சற்றே நகர்ந்து சென்று, தன் அம்மாவை பின்புறமாக இருந்து மென்மையாக அணைத்துக் கொண்டான். அவளுடைய தோள்ப்பட்டையில் தன் தாடையை வைத்து அவன் தேய்க்க, “ஹ்ம்ம்.. என்ன.. இன்னைக்கு அம்மா மேல ஒருத்தனுக்கு பாசம் பொங்கி வழியுது..??” பாரதி திரும்பி பாராமல் கப்புக்குள் ஸ்பூன் விட்டு கலக்கிக்கொண்டே கேட்டாள். “தேங்க்ஸ் மம்மி..!!” அசோக் சம்பந்தமே இல்லாமல் சொன்னான். “தேங்க்ஸா.. எதுக்கு..??” “இல்ல.. எனக்கு கொஞ்ச நாளாவே மனசுல ஒரு கொழப்பம்.. எந்த நேரமும் போட்டு இம்சை பண்ணிட்டே இருந்தது..!! நேத்து உன்கிட்ட பேசினப்புறம் அந்த கொழப்பம்லாம் போய்.. மைன்ட் இப்போ ஃப்ரெஷ் ஆயிடுச்சு..!!” “ம்ம்.. அப்படி என்ன கொழப்பம் உனக்கு..??” “எப்படி சொல்றது.. ஹ்ம்ம்…. பொண்ணுகளை பத்தி.. அவங்கட்ட பேசுறதை பத்தி.. லவ்வை பத்தி.. அதுக்கான குவாலிஃபிகேஷன் பத்தி..!!” அசோக் சொல்ல, பாரதி இப்போது திரும்பினாள். அசோக்கை பார்த்து மெலிதாக புன்னகைத்தாள். மகனுடைய கண்களையே சில வினாடிகள் உன்னிப்பாய் கவனித்து, ஏதோ உண்மையை அறிய முயன்றாள். அப்புறம் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல், இதழில் ஒரு புன்சிரிப்புடன் கேட்டாள். “ஹ்ம்ம்.. எப்படியோ.. மனசு இப்போ தெளிவாயிடுச்சில..??” “ம்ம்.. ஆயிடுச்சு..!!” “அப்போ.. இன்னும் கொஞ்ச நாள்ல.. ‘இவதான் மம்மி உன் மருமக..’ன்னு எவளையாவது இழுத்துட்டு வந்து என் முன்னாடி நிறுத்துவேன்னு எதிர்பார்க்கலாமா.??” பாரதி குறும்பாக கேட்க, “ஹாஹா..!! அந்த அளவுக்குலாம் இப்போ என்னால அஷ்யூரன்ஸ் குடுக்க முடியாது மம்மி.. வேணுன்னா ஒன்னு மட்டும் சொல்லலாம்..!!” அசோக் சிரிப்புடன் சொன்னான். “என்ன..??” “இப்போதைக்கு உன் புள்ள செம லவ் மூடுல இருக்கான்.. எவளாவது சிக்குனான்னு வச்சுக்கோ.. பட்டுன்னு ‘ஐ லவ் யூ..’ சொல்லிருவான்..!! ஹ்ம்ம்.. எவளுக்கு லக் அடிக்கப் போவுதோ..??” அசோக் காலரை தூக்கிவிட்டவாறு எகத்தாளமாக சொல்ல, பாரதியால் சிரிப்பை அடக்க முடியவில்லை. “ஹாஹாஹாஹா..!! பின்ன என்ன.. என் புள்ளை புருஷனா கெடைக்கிறதுக்கு.. பூர்வ ஜென்மத்துல நெறைய புண்ணியம்ல பண்ணிருக்கனும் அவ..!!” “ஹ்ம்ம்.. எங்க இருக்காளோ, என்ன பண்ணிட்டு இருக்காளோ.. அந்த புண்ணியவதி..!!” அசோக் ஒரு பெருமூச்சுடன் சொன்னான். “அட.. ஏண்டா சலிச்சுக்குற..?? உனக்கு வரப்போறவ என்ன இனிமேலா பொறக்கப்போறா..?? அல்ரெடி எங்கயோ பொறந்திருப்பா.. அடிக்கடி உன் கண்ணு முன்னாடி கூட வந்து போயிருப்பா.. உனக்குத்தான் அடையாளம் கண்டுபிடிக்க தெரியல..!! இனிமேயாவது உன் கண்ணை நல்லா தெறந்து.. கொஞ்சம் சுத்திமுத்தி பாரு..!!” அசோக்கின் கன்னத்தை பிடித்து செல்லமாய் திருகியவாறே சொன்ன பாரதி.. பிறகு அந்தப்பக்கமாய் திரும்பி.. சற்றுமுன் பால் ஊற்றி கலக்கிய அந்த கப்பை எடுத்து.. இப்போது அசோக்கிடம் நீட்டினாள்..!! “இந்தா..” “என்ன.. கண்ணை தெறந்து பாருன்னுட்டு காபியை நீட்டுற..??” “இது காபி இல்லடா.. பூஸ்ட்..!!” “எதோ ஒன்னு.. எனக்கு வேணாம்..!!” “இது உனக்கு இல்ல.. உன் தங்கச்சிக்கு…!! கொண்டு போய் கொடு போ..!!” பாரதி சொல்ல, அசோக் இப்போது சற்றே நெற்றியை சுருக்கினான். “அவளுக்கா..?? அதுக்குள்ளயா எந்திரிச்சுட்டா அவ..??” “ஆறு மணிக்கே அலாரம் வச்சு எந்திரிச்சுட்டா..!!” அசோக்கிற்கு இப்போது நிஜமாகவே ஆச்சரியமாக இருந்தது. பள்ளியில் படிக்கிற காலத்திலேயே.. எக்ஸாம் டயத்தில் கூட.. எட்டு மணிவரைக்கும் இழுத்துப் போர்த்திக்கொண்டு.. சொங்கி மாதிரி தூங்குவாள் சங்கி..!! இன்று ஆறு மணிக்கே அலாரம் வைத்து எழுந்திருக்கிறாள் என்றால்.. ‘சங்கீதாவின் வாழ்க்கையிலேயே முதன் முறையாக..’ என்று சன் டிவியில் விளம்பரம் போட்டால் கூட வியப்பதற்கு ஒன்றுமில்லை என்று தோன்றியது..!! “எ..என்ன மம்மி சொல்ற..?? ஆறு மணிக்கே அலாரம் வச்சு எந்திரிச்சாளா..?? அப்படி என்ன வேலை பாக்குறா எந்திரிச்சு..??” “ம்ம்…??? எல்லாம் நீ குடுத்த வேலைதான்..!! போ.. நீயே போய் அவ அட்டூழியத்தை பாரு..!!” அசோக் குழப்பம் இன்னும் விலகாமலே, அம்மாவிடம் இருந்து காபி கப்பை வாங்கிக்கொண்டான். தங்கையின் அறை நோக்கி மெல்ல நடந்தான். பாரதி அசோக்கிடம் அந்த வேலையை ஏவியதற்கு மறைமுகமாக ஒரு காரணம் கூட உண்டு. பிள்ளைகள் இருவரும் நேற்று உரசி மனக்காயப்பட்டுக் கொண்டார்கள் அல்லவா..?? இன்று அவர்கள் இருவரையும் அருகில் இழுத்து வைத்து, அவர்களை கைகுலுக்கிக்கொள்ள வைப்பது மாதிரியான முயற்சி அது..!! ‘அப்படி என்ன வேலை..??’ என்று கேள்வியுடனே தங்கையின் அறைக்குள் நுழைந்த அசோக்கிற்கு, பால்கனியில் இருந்து ஹை பிட்ச்சில் ஒலித்த சங்கீதாவின் சத்தம், அவன் காதில் விழுந்த அடுத்த நொடியே எல்லாம் புரிந்து போனது. “வாயை மூடு..!!! வாயை மூடுன்றேன்ல..???? நான் சொல்றதை கேளு..!!! ப்ச்.. இப்போ கேக்கப் போறியா இல்லையா நீ..????” காதில் ப்ளூடூத் ஹெட்போனுடன் காளி மாதிரி கத்திக் கொண்டிருந்தாள் சங்கீதா. அவள் அப்படி கத்தியதும், அடுத்த முனை பட்டென ஆஃப் ஆகியிருக்க வேண்டும். இந்த முனையில் இவள் வாயைத் திறந்து படபடவென பொரிந்து தள்ள ஆரம்பித்தாள். ஒரு இடத்தில் நிற்காமல் அங்கும் இங்கும் வெடுக் வெடுக்கென நடந்தவாறே, வெடித்து சிதறினாள். “அப்போ இத்தனை நாளா எங்கிட்ட நடிச்சுட்டு இருந்திருக்க.. என்னை ஏமாத்திட்டு இருந்திருக்க.. அப்படித்தான..?? லவ் பண்றதுக்கு முன்னாடிலாம்.. என் பின்னாடி அப்படியே நாய் மாதிரி நாக்கை தொங்க போட்டுட்டு அலைவல.. அப்போ மட்டும் என் வாய்ஸ் லவ்லி வாய்ஸா இருந்தது… இப்போ லவ் பண்ண ஆரம்பிச்சப்புறம் நரி வாய்ஸ் ஆயிடுச்சா..