சார்..நீங்க தான் மனசு வைக்கணும்
என் பெயர் கார்த்திகா, வயது 37 ஆகிறது. எம்பிஏ வரை படித்து இருக்கிறேன். நல்ல அலுவலகத்தில் வேலையில் இருந்தேன். ஆனால் கல்யாணத்துக்கு பின்னல் அந்த வேலையை விட நேரிட்டது.
அதன் பின்னர் இரண்டு குழந்தைகள். ஒரு ஆன் ஒரு பெண்…கணவர் கொஞ்சம் பாசம் ஆனவர். பெரிதாக கோவப்பட மாட்டார் என்னை புரிந்துகொள்ளவும் செய்வார். அதனால் வாழ்கை 37 வயது வரை பிரச்சனை ஏதும் இல்லாமல் சென்றது.
என் கணவர் பெரிய நிறுவனத்தில் ஒரு நல்ல வேலையில் இருந்தார். அவருக்கு என்னை விட ஒரு 4 வயது தான் அதிகம். பார்க்க அழகாக இருப்பார்..எப்போதும் கிளீன் சேவ் மற்றும் மிடுக்கான உடை அணிவார். பார்க்கவும் வசீகரமாக இருப்பார்…அலுவலகத்தில் 41 வயதிலும் அவருக்கு பெண் விசிறிகள் உண்டு. அதை என்னிடம் பெருமையாகவும் சொல்லிக்கொண்டு இருப்பார். அவர் வேலையிலும் கெட்டிக்காரர்..குறைந்த வயதிலேயே ஒரு நல்ல நிலையில் இருந்தார். வாழ்கை எங்களுக்கு ரொம்பவே சந்தோசமாக இருந்தது.
ஆனால் சந்தோஷம் எப்போதும் நிலைப்பதில்லை என்பதை போல..சில நாட்களாக எங்கள் வீட்டில் என்கணவர் அமைதியாகவே இருந்தார்.
நான் என்னவென்று கேட்டதற்கு அவர் ஒன்றும் இல்லை வேலைப்பளு என்று மழுப்பினார். ஆனால் எனக்கு நன்கு தெரியும் இத்தனை வருடத்தில் அவர் ஒருநாள் கூட வேலை பளுவை வீட்டில் காட்டியது இல்லை. இந்தமுறை அது வினோதமாக இருந்தது.
நானும் பலநாள் கேட்டும் சரியாக பதில் இல்லையே என்று விட்டு விட்டேன்.
அப்படியிருக்க ஒருநாள் வீட்டுக்கு குடித்துவிட்டு வந்தார். அவருக்கு கெட்ட பழக்கம்ம் என்பது கிடையாது. அன்று குடித்துவிட்டு வர எனக்கோ ஒரே பயம்..என்ன ஆச்சு இவருக்கு என்று.
குடி போதையில் இருந்த அவரை நிதான படுத்தி அமரவைத்து தண்ணீர் கொடுத்தேன்.
:
நான் ::: என்னங்க ஆச்சு ஏன் இப்படி குடிச்சிட்டு வந்துருக்கீங்க…
:
கணவன் ::: என் கண்ணம்மா நா என்ன பண்ணுவேன்… என்று அழுக துவங்கினார்.
:
எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை..ஏன் அழுகுறாரு என்று தெரியாமல் அவரை என் நெஞ்சோடு கட்டி அணைத்து தேற்றினேன்.
அவர் மெல்ல மெல்ல அமைதியாக…அருகே அமர்ந்து என்னனு சொல்லுங்க அப்போ தானே எனக்கு புரியும்.
:
கணவர் ::: என்னனு சொல்லுறது கார்த்திகை..ஒரு பெரிய தப்பு நடந்துருச்சி
:
நான் ::: என்ன ஆச்சு சொல்லுங்க.
:
கணவன் ::: இதற்கு முன்னால எனக்கு மேனேஜர் ஆகா இருந்தார் அல்லவா ஒருத்தர்..
:
நான் ::: அந்த சுரேஷ் சார் தானே..
:
கணவர் ::: ஆமா அவரு தான். அவரு சில பைல்ஸ் கிளியர் பண்ண சொல்லிருந்தாரு. அவரு இருந்தப்போ.
:
நான் ::: சரி அதுக்கென்ன…
:
கணவன் ::: அதுல பல கோடி ருபாய் கணக்குல வரல. நான் அதை அப்போவே அவருகிட்ட கேட்டேன். அவரு எல்லாம் நா மேலிடத்துல பேசிட்டேன்..நீ கிளியர் பண்ணி விடுன்னு சொன்னாரு.
:
நான் ::: சரி…
:
கணவர் ::: நானும் பண்ணி விட்டேன். அவன் கொஞ்ச நாள் முன்னால வேலைய விட்டு நின்னுட்டான் ..இப்போ இருக்குற புது மேனேஜர் அதை நோண்டி எடுத்துட்டான்.
இப்போ என்னை தான் மொத்த கணக்கும் கையாடல் பண்ணிட்டேன்னு சொல்லுறான்.
:
நான் ::: அந்த சுரேஷ் சார் தான் சொன்னாருன்னு சொல்ல வேண்டிய தானே.
:
கணவர் ::: அதுக்கு சாட்சி இல்லடி. நா தான் கையெழுத்து போட்ருக்கேன். இப்போ இருக்கறவன் வேற ஒரு சின்ன பையன். அவன் கிட்ட அசிங்க பட்டு நிக்குறப்போ என்ன சொல்றதுன்னு தெரியல.
:
நான் ::: சரி கொஞ்சம் அமைதியா இருங்க யோசிப்போம்.
:
கணவர் ::: நா யோசிச்சிட்டேண்டி என்னவெல்லாமோ முயற்சி பண்ணிட்டேன். கடைசியில ஜெயிலுக்கு தான் போவேன் போல…
என்னால் அன்று அவருக்கு ஆறுதல் தான் சொல்ல முடிந்ததே தவிர வேறு ஏதும் செய்ய முடியவில்லை. மேலும் அவர் அலுவலக வேலையில் நான் என்ன செய்ய தான் முடியும்.
நாட்கள் செல்ல செல்ல அவர் மேலும் பலவீனம் ஆனார் தினமும் குடி, வீட்டில் குழந்தைகளை சரியாக கவனிக்க முடியவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் நான் இருக்க…ஒருநாள் நானே அவர் அலுவலகத்துக்கு சென்றேன்.
அங்கே அவரின் மேனேஜர் பார்க்க கேட்டு காத்திருந்தேன்.
ஒரு அரைமணி நேரம் கழித்து என்னை உள்ளே அழைத்தான்.
உள்ளே சென்ற நான்…
:
நான் ::: ஹலோ சார்…
:
அவன் ::: ஹெலோ..உக்காருங்க…
அவன் சின்ன பையனாக தான் தெரிந்தான்..வயது ஒரு 27-28 தான் இருக்க வேண்டும். எப்படி இந்த சின்ன வயதில் இவ்வளவு பெரிய பதவி என்று எனக்கு அப்போது புரியவில்லை.
:
அவன் ::: சொல்லுங்க மேடம்…என்ன விஷயம்.
:
நான் ::: நா உங்க எம்பிளாயி ப்ரியதர்ஷன் மனைவி..
:
அவன் ::: சொன்னாங்க…நா என்ன ஹெல்ப் பண்ணனும் சொல்லுங்க.
:
நான் ::: இல்லங்க சார்…என்ன பிரெச்சனைனு உங்களுக்கே தெரியும். அவரு அப்படி பட்ட ஆளு இல்லை.
:
அவன் ::: இங்க பாருங்க மேடம்…அவரு நல்லவருனு தான் எல்லாரும் சொல்ராங்க. ஆனா நமக்கு தேவை ஒரு ஆதாரம். அது இல்லாம ஏதும் பண்ண முடியாது.
:
நான் ::: சார் கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க. வீட்டுல ரொம்ப பிரெச்சனை. இதனால வீட்டுல நிம்மதியே போயிடுச்சி.
:
அவன் ::: மேடம் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. உங்க வீட்டுல நடக்குற பெர்சனல் எல்லாம் எனக்கு தேவை இல்லாத விஷயம். உங்க கணவர் ஒழுங்கா வேலை பாத்து இருந்தா இப்போ இந்த நிலமைல இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நீங்க கிளம்பலாம்…
அவன் அப்படி மூஞ்சியில் அடித்தாற்போல பேச எனக்கு அசிங்கமாக ஆனது. அங்கிருந்து ஏதும் சொல்லாமல் எழுந்து வந்து விட்டேன்.
என்னிடம் யாரும் அவ்வளவு காட்டமாக பேசியது இல்லை. ஏதும் சொல்லாமல் வீட்டுக்கு வந்தேன். அன்று சாயங்காலம் வீட்டுல நான் இருந்தப்போ என் கணவர் வந்தார் கூடவே அந்த மனஜரும் வந்தான்.
என் கணவன் அவரை அழைத்து உள்ளே வந்தார்…எனக்கு ஒன்றும் புரியவில்லை.
:
கணவர் ::: கார்த்திகா சாருக்கு குடிக்க எதுனா எடுத்துவா…
:
நானும் உள்ளே சென்று சூடாக டீயை போட்டேன்.
எடுத்து சென்று கொடுத்தேன்.
:
கொடுத்துவிட்டு நான் குழந்தைகளை கூட்டிக்கொண்டு உள்ளே படுக்கும் அறைக்கு வந்துவிட்டேன். ஒரு 45 நிமிடம் இருக்கும்…அவர்கள் ஏதோ பேசிக்கொண்டு இருந்தார்கள்.
:
பின்னர் என் கணவர் நான் இருந்த அறையின் கதவை திறந்தார்…அவர் முகத்தில் ஏதோ தயக்கம்.
:
கணவர் ::: கார்த்திகா…கொஞ்சம் வெளியவா …பிள்ளைங்க உள்ளேயே இருக்கட்டும்.
:
நானும் எழுந்து வெளியே வந்தேன். என் கணவர் என்னை அழைத்துச்சென்று அந்த மேனேஜர் இருந்த இடத்தில அருகே அமர வைத்து அவரும் அமர்ந்தார்.
:
கணவர் ::: இந்த விசயத்துல இருந்து நாம வெளிய வரதுக்கு சார் ஒரு வழியிருக்குனு சொல்லுறாரு.
:
நான் ::: அப்பாடா…நா கூட இன்னைக்கு நீங்க பேசுனதை நினைச்சி ரொம்ப பயந்துட்டேன் சார்…என்னனு சொல்லுங்க. அவரு கண்டிப்பா பண்ணுவாரு.
:
அவன் ::: அவரு பண்ணுவாரு மேடம்..நீங்க சம்மதிக்கணுமே…
:
நான் ::: சொல்லுங்க சார்..கண்டிப்பா பண்ணுறேன்.
:
அவன் ::: முதல்ல சார்னு கூப்பிடுறத நிறுத்துங்க. விக்ரம்னு கூப்பிடுங்க.
:
நான் ::: இல்ல உங்களை எப்படி பேர் சொல்லுறது. அவரோட மேனேஜர் ஆச்சே…
:
அவன் ::: சரி விடுங்க…நா விஷயத்துக்கு வரேன். உங்க கணவர் தான் இதை எல்லாம் பணியிருக்காருனு எல்லா சாட்சியும் இருக்கு. அவரு போட்ட கையெழுத்து எல்லாமே அவருக்கு எதிரா இருக்கு இப்போ. ஆனா அவரு இதையெல்லாம் பன்னிட்டு இங்க இருக்க வேண்டிய அவசியம் இல்ல.
:
நான் ::: அதை தான் சார் நாங்களும் சொல்றோம். எங்களுக்கு அவ்வளவு பணம் தேவை இல்லை.