ஆலிஷா – 2
சிவா என பேரினை சொன்னதும் ஆலிஷாவுக்கு மனதில் சின்ன ஒரு சந்தேகம் தோன்றியது..
“என்னது…? சிவாவா..? ஹிந்து பையனா..?”
ஆலிஷா – 1→
“ஆமா..”
“நீங்க எல்லாரும் கிறிஸ்டியன் பேமிலி தானே..? அவன மட்டும் எப்புடி ஹிந்து பையன்னு சொல்ற…?”
“அது ஒரு பெரிய கத.. நா அப்புறமா சொல்றேன்..”
“அது என்ன கத..?”
“அதெல்லாம் உனக்கு எதுக்கு..? அவன் யாரா இருந்தா உனக்கென்ன..? அவன் வந்தா லேப்டாப்ப குடு.. அவன் ஏதும் பண்ண முடியுமான்னு பாத்து சரி பண்ணி தருவான்..”
“சும்மா ஒரு பேச்சுக்கு கேட்டேன்டி.. நீ அவன வர சொல்லு..”
“ஓகே.. பை..”
“பை..”
கிருஷ்டினா போனை வைத்ததும் ஆலிஷா பெட்டில் இருந்து துள்ளி எழுந்தாள்..
கட்டியிருந்த டவலை ஒரு கையால் பிடித்து இழுத்து உருவி கட்டிலில் போட்டாள்.. அலுமாரி ட்ராவரை திறந்து அதிலிருந்து ஒரு சிகப்பு நிற பிராவையும் சிகப்பு நிற பேன்ட்டியினையும் எடுத்து அணிந்து கொண்டாள்.. கண்ணாடியில் தெரிந்த அவளது செக்ஸியான உடம்பினை பார்த்து ரசித்துக் கொண்டே வெள்ளை நிற சுடிதார் ஒன்றினையும் நீல நிற அகலமான பேன்ட் ஒன்றினையும் அணிந்து கொண்டாள்.. பின்னர் லேப்டாப்பினையும் அதன் சார்ஜரினையும் எடுத்து லேப்டாப் பேக்கில் போட்டு ரெடியாக வைத்து விட்டு மீண்டும் போனுடன் கட்டிலில் சாய்ந்தாள்..
தான் வீட்டில் தனியாக இருக்கும் பொழுது வேறு ஒரு அந்நிய ஆடவன் அவளது வீட்டிற்கு வருவதனை யாராவது பார்த்து ஹிஷாமிடம் சொல்லிவிட்டால் தேவை இல்லாத சந்தேகங்கள் ஹிஷாம் மனதில் எழக்கூடும் என்பதனால்.. தயங்காமல் ஹிஷாமுக்கு போன் செய்து கிறிஸ்டினாவின் அவசரமான லேப்டாப் தேவை பற்றிக் கூறினாள்.. லேப்டாப்பை சரி பண்ண வருவது அவளது மாமா பையன் என்பதனால் அவனும் சரி என சம்மதித்தான்..
அதன் பிறகு ஆலிஷா கொஞ்ச நேரம் யூடியூப்பில் வீடியோக்கள் பார்த்துக் கொண்டிருந்தாள்.. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்தின் பின்னர் எப்படியோ கிறிஸ்டினா கூறிய அட்ரஸ்ஸினை தேடிக் கண்டுபிடித்து அங்கு வந்து சேர்ந்தான் சிவா..
கால்லிங் பெல் சத்தம் கேட்டு போட்டிருக்கும் சுடிதாருக்கு மேட்சிங்காக நீல நிற ஷாவ்ல் ஒன்றினை போட்டு தலையையும் மார்பகங்களையும் மறைத்தபடி வந்து கதவினைத் திறந்தாள் ஆலிஷா..
ஆலிஷாவைக் கண்டதும் ஒரு கணம் நிலை தடமாறிப் போனான் சிவா.. அவளது அழகு அந்த ஒரு செக்கனில் முதல் பார்வையிலேயே அவனுள் ஊடுருவி அவன் ஆண்மையை ஒரு ஆட்டு ஆட்டியது.. உடனே சமாளித்துக் கொண்டு..
“இது ஆலிஷா அக்கா வீடு தானே..?”
“ஆமா.. நீங்க…?”
“ஐ ஆம் சிவா.. கிறிஸ்டினா அனுப்புனாங்க..”
“ஓஹ்.. இங்க உக்காருங்க.. இதோ வந்துடுறேன்..”
என்று வெளியே இருந்த ஒரு கதிரையைக் காட்டி அங்கே அவனை உட்காரச் சொல்லிவிட்டு வீட்டினுள் சென்று லேப்டாப்பினை எடுத்துக்கொண்டு வந்தாள்..
“இத இங்கயே வச்சி பாக்குறீங்களா…? இல்லன்னா ஷாப் கொண்டு போய் தான் பாக்கணுமா..?”
“உங்க இஷ்டம்.. இங்கயே வச்சி பாக்கணும்னா இங்கயே வச்சி பாக்குறேன்.. இல்லன்னா ஷாப் கொண்டு போய் பாக்குறேன்..”
“இங்கயே பாக்க முடியும்னா இங்கயே வச்சி பாருங்க.. நோ ப்ராப்ளம்..”
“சரி.. ஓகே.. இத வச்சி கழட்டி பாக்க எனக்கு ஒரு டேபிள் வேணும்..”
“இதோ தாரேன்..”
என்றபடி திரும்பி உள்ளே சென்றாள்..
திரும்பி நடந்த அவளது பின்னழகுகள் ஆடும் ஆட்டத்தினை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான் சிவா..
“ப்ப்பாஹ்.. என்ன பொண்ணுடா இவ..! கட்டுனவன் ரொம்ப குடுத்து வச்சவன்..” என்று மனதில் நினைத்துக் கொண்டான்..
உள்ளே சென்றவள் டேபிள் மேட் ஒன்றினைக் கொண்டு வந்து அவன் அமர்ந்திருந்த கதிரை முன்னே வைத்தாள்..
அதில் லேப்டாப்பினை வைத்து தனது வேலையினை ஆரம்பித்தான் சிவா.. கொஞ்சம் தள்ளி நின்று கொண்டு அவன் லேப்டாப்பினை கழட்டுவதனை வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்று கொண்டிருந்தவள்.. கொஞ்சம் அவன் மீதும் பார்வையை செலுத்தினாள்..
உயரமான திடகாத்திரமான ஒரு இளைஞன்.. அவள் அளவுக்கு இல்லை என்றாலும் அவனும் கொஞ்சம் மஞ்சள் நிறமாகத்தான் இருந்தான்.. லேசானா தாடியும் மீசையும் வைத்திருந்தான்.. முடியினை நன்றாக வளர்த்து ஒழுங்காக வாராமல் கலைத்து விட்டிருந்தான்.. வலது காதில் மாத்திரம் ஒரு தோடு குத்தி இருந்தான்.. இறுக்கமாக அணிந்திருந்த அவனது டீ ஷர்ட் அவனது உடம்பின் திடகாத்திரத்தினை வெளியே படம் போட்டுக் காட்டியது.. வெயிலின் தாக்கத்தில் கொஞ்சம் வியர்த்திருந்தான்.. அதனைக் கண்டதும் உள்ளே சென்று பேன் ஒன்றினை எடுத்துக் கொண்டு வந்து அவன் முன்னே வைத்து ஆன் செய்தாள்..
“தேங்க்ஸ்..” என்றவாறு மறுபடியும் வேலையில் மூழ்கினான்..
“ஹ்ம்ம்.. என்ன குடிக்கிறீங்க…?”
“கூலா எது தந்தாலும் ஓகே தான்..”
கேட்ட உடனே ‘பரவால்ல எதுவும் வேணாம்’னு சொல்லுவான் என்று எதிர்பார்த்தாள்.. ஆனால், அவன் கூச்சமே இல்லாம கூலா ட்ரிங்க்ஸ் கேக்குறானே என்று நினைத்துக் கொண்டு உள்ளே சென்று ஆரேஞ்ச் ஜூஸ் பண்ணிக்கொண்டு வந்து கொடுத்தாள்.. அதனை ஒரே கல்ப்பில் குடித்து முடித்து விட்டு..
“தேங்க்ஸ்.. இந்த வெயிலுக்கு செம்மயா இருக்கு..”
“ஹ்ம்ம்.. இன்னும் தரவா…?”
“இல்லக்கா.. போதும்.. போதும்.. தேங்க்ஸ்..”
“ஹ்ம்ம்.. லேப்டாப் ல என்ன ப்ராப்ளம்..?”
“ஒரு நிமிஷம்..”
என்றவாறு ஏதேதோ பண்ணியவன்..
“லேப்டாப் ல எதுவும் ப்ராப்ளம் இல்ல.. உங்க சார்ஜர்ல தான் ப்ராப்ளம்..”
என்றவாறு தான் கொண்டு வந்திருந்த யுனிவர்சல் பவர் சப்ளை மூலம் லேப்டாப்பிற்கு நேரடியாக பவர் சப்ளை கொடுத்து லேப்டாப்பினை ஆன் செய்து காட்டினான்..
“ஓஹ்.. தேங்க்ஸ் அலோட் சிவா..”
“சார்ஜர் ஒண்ணு புதுசா வாங்கி போட்டிங்கன்னா சரி..” என்றவாறு லேப்டாப்பினை மீண்டும் பொருத்தி சரி செய்து அவளிடம் நீட்டினான்.. பின்னர், தனது பேக்கினை அணிந்து கொண்டு கிளம்ப எத்தனித்தான்..
“உங்க பீஸ் எவ்ளோ…?” அவனை நிறுத்தினாள்..
“அய்யோ.. பீஸ் லாம் எதுவும் வேணாம் கா.. நா கிறிஸ்டினா சொன்னதுக்காக வந்தேன்..”
“யார் சொன்னாலும் உங்க தொழில் இது.. நீங்க பண்ணதுக்கு பீஸ் வங்காம போகலாமா…?”
“அய்யோ.. இது என்னோட தொழில் இல்லக்கா.. நா இப்ப தான் காலேஜ் பைனல் இயர்..”
“வாட்…?”
“ஆமாக்கா..”
“பாத்தா காலேஜ் பையன் மாதிரி தெரியல.. நா கூட உங்க பேக், டூல்ஸ் எல்லாம் பாத்து நீங்க லேப்டாப் ரிப்பேர் பண்ற வேர்க் தான் பண்றீங்கன்னு நெனச்சிட்டேன்.. சாரி..”
“ஓஹ்.. இதெல்லாம் என்னோட லேப்டாப் அப்பப்போ கரைச்சல் குடுக்கும் போது சரி பண்றதுக்காக வாங்கி வச்சிருக்கேன்..”
“ஓகே சிவா.. தேங்க்ஸ் அலோட்..”
“சரிக்கா.. நா வாரேன்.. லேப்டாப் ல ஏதாச்சும் ப்ராப்ளம் வந்தா எனக்கு கால் பண்ணுங்க.. நா வந்து செஞ்சி தாரேன்..”
“உங்க நம்பர் சொல்லுங்க.. தேவ பட்டா கால் பண்றேன்.. ஆனா, அடுத்த தடவ நீங்க பண்ற வேலைக்கு கட்டாயம் பீஸ் எடுக்கணும் சரியா…?”
“ஹாஹா.. ஓகே.. ஓகே..”
அவனது நம்பரை வாங்கி போனில் சேவ் செய்து கொண்டாள் ஆலிஷா..
அவன் சென்ற பின்னர் ஹிஷாமுக்கு போன் செய்து நடந்ததைக் கூறி.. வரும் பொழுது மறக்காமல் சார்ஜர் ஒன்றினை வாங்கிக்கொண்டு வருமாறும் கூறி விட்டு போனை வைத்தாள்..
ஆலிஷா சிறு வயதில் இருந்தே கம்ப்யூட்டரில் கை தேர்ந்தவளாக இருந்ததனால் அவளது அப்பா அவளது விருப்பம் போலவே ஒரு பிரபலமான காலேஜில் சேர்த்து அவளை சாப்ட்வேர் என்ஜினீயரிங் படிக்க வைத்தார்.. காலேஜில் படிக்கும் போது அவளது அழகில் மயங்கி நிறையப் பேர் அவளை ஒருதலையாக காதலித்துக் கொண்டிருந்தனர்.. அதில் காலேஜ் சீனியர் ஹிஷாமும் ஒருவன்..