அவளுக்கும் உணர்ச்சி உண்டு Part 7
தாமரை, ‘அகல்யா’ பற்றி பேசியதும் அவளுடன் ஏற்பட்ட அழகான பசுமையான நினைவுகள் எல்லாம் என் மனதில் ஒவ்வொன்றாக அடுத்தடுத்து தோன்றின. உடனே உள்ளே இருந்த என் பெட்ரூம் நோக்கி சென்று அங்கே சிதறி கிடந்த துணிகள் பொருட்களை எல்லாம் ஓரமாக தள்ளிவிட்டு அங்கே இருந்த செல்பில் இருந்த துணிகளை எல்லாம் விலக்கி நான் தேடி வந்த அந்த ஆல்பத்தை எடுத்து தொட்டு பார்க்கும் போதே மனதிற்கு அவ்வளவு சுகமானதாக இருந்தது.
அந்த ஆல்பத்தில் வெளியிலே அழகான வெண்மை பற்களை காட்டி கன்னத்தில் குழி விழுக சிரித்துக் கொண்டிருந்தாள் என் அகல்யா.. என்னை மட்டும் இந்த உலகத்தில் பரிதவிக்க விட்டு விட்டு இதோ அவள் மட்டும் சந்தோஷமாக சிரித்துக் கொண்டிருக்கிறாள்.
அந்த ஆல்பத்தை திறந்து ஒவ்வொரு படமாக பார்த்தேன். எங்களின் திருமணத்தில் எடுத்த படங்களாக இருந்தன. அதை எல்லாம் பார்த்தவாறே புரட்டி கொண்டு வந்தேன். தாமரையும் முன் இருந்த ஹாலில் இருந்து பெட்ரூமின் வாசலின் வந்து நின்றுக் கொண்டிருந்தாள். அவள் உள்ளே வரலாமா வேண்டாமா என தயங்கிய படி நின்றுக் கொண்டிருந்தாள்.
அவளை பார்த்து “உள்ள வா தாமரை” கூப்பிட
“இல்லங்க நீங்க ஏதோ பாத்திட்டு இருக்கீங்க.. நா வேணா முன்னாடி இருக்கேன்” ஒருவித தயக்கத்தோடு சொன்னாள்..
“நீ அகல்யா பத்தி கேட்டதும் அவ கூட இருந்தது எல்லாம் நியாபகத்துக்கு வந்தது. அதான் அவ கூட எடுத்த ஃபோட்டா எல்லாம் பாத்திட்டு இருக்கேன்.” என்றேன்.
“நீ சொன்ன மாதிரி அவ அவ்வளவு அழகானவ தான். உடல்ல மட்டுமல்ல.. மனசுல கூட அவ அழகாகன தான்.” சொல்லிட்டு
“நீயும் உட்காந்து பாரு தாமரை” என்னையும் அறியாமல் அவளையும் கூப்பிட அவளும் சந்தோஷமாக வந்து தூசியாக இருந்த அந்த மெத்தையில் என்னுடன் உட்காந்துக் கொண்டாள். அவள் எப்படி எதற்காக கூப்பிட்டேன் என என்னால் யூகிக்க முடியவில்லை. இதெல்லாம் நான் யோசித்துக் கொண்டிருக்க தாமரையின் கண்கள் என் மடியில் இருந்த அந்த ஆல்பத்தில் இருந்திருக்கிறது. அவள் அடுத்ததை பார்க்க திருப்ப சொல்லும் போதே சுய நினைவுக்கு வந்து வேகமாக திருப்பினேன்.
நான் நினைத்த அந்த பக்கமும் சரியாக வந்து நின்றது. நாங்கள் திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த முதல் நாளின் இரவில் எடுக்கபட்ட படங்கள் தான் அது. அகல்யா வெள்ளை நிறத்தில் சிகப்பு பாடர் வைத்த பட்டு புடவையில் அப்படியே அகல் விளக்கினை ஜொலித்தாள். பற்றாத குறைக்கு அவளின் கையில் பால் சொம்புடன் அடி மீது அடி எடுத்து வைத்து என்னை நோக்கி வரும் போது அவளுக்கே ஆச்சிரியமூட்டும் வகையில் அவளை படம் பிடிக்க வெட்கத்தில் ஒற்றை கையால் அவளின் முகத்தை மறைக்க முயற்சி செய்தாள். ஆனால் அவளால் முடியவில்லை.
அவளின் அழகு அகல் விளக்கின் ஒளி போல் அவ்வளவு பிரகாசமானது. அதை எல்லாம் ஒற்றை உள்ளங்கைகளுக்கு எல்லாம் அடங்கி விட முடியாது. அவள் என்னை நெருங்கி வரும் வரை அவளின் அழகை தொடர்ந்து வெவ்வேறு கோணங்களில் படமாக எடுத்துக் கொண்டிருந்தேன். அவள் என்னை நெருங்கி வந்து கையில் இருந்த சொம்பை வேகமாக பக்கத்தில் இருந்த டேபிள் வைத்து விட்டு
“அய்யோ போதும். காதலிக்கும் போது தான் என்னை பாத்திட்டே இருக்குனும் சொல்லி ஃபோட்டாவா எடுத்திங்க.. இப்ப தான் நா உங்க கூட தான இருக்கேன். இனி உங்க கூடவே தான் இருக்க போறேன்.. இனியும் எதுக்கு ஃபோட்டாவா எடுத்துட்டு இருக்கீங்க” அகல்யா கேட்க
“இங்க பாரு அம்மு நீ என் கூட இருந்தாலும் சரி இல்லாட்டியும் சரி” சொல்ல அவளுடைய அழகான விரல்கள் என் வாயை வந்து மூடியது. அப்போது தான் நான் சொன்னதற்கான அர்த்தம் புரிந்து அவளின் முகத்தை பார்க்க ஆனால் அவளோ முகத்தில் எந்த ஒரு வருத்ததையும் காட்டாமல் அமைதியாக என் முன் நின்றாள்..
என் உதட்டின் மேல் இருந்த அகல்யாவின் உள்ளங்கைக்கு அடியில் உதட்டை குவித்து முத்தமிட ஒரு வினாடி அவள் சிலிர்த்து தன் கையை எடுத்துக் கொண்டாள். அவள் கையை என் உதட்டில் இருந்து எடுக்கும் போது நாணத்தில் அவளின் தலை குனிந்திருந்தது. நான் தலையை குனிந்து அவளின் முகத்தை பார்க்க இன்னும் நாணத்தில் இருக்க அதையும் ரசித்து அதில் இருந்து வெளிவருவதற்குள் அந்த நாணத்துடனே அகல்யாவை ஒரு ஃபோட்டா எடுத்தேன். அந்த சத்தம் கேட்டு அவள் கண்ணை நன்றாக விழித்து பார்க்க என் கையில் இருந்த பிஎஸ்எல்ஆர் கேமராவை பிடுங்கி
“உங்கள கூட இருந்து எப்படி தான் காலத்த ஓட்ட போறேன் தெரியல.” அவள் சொல்ல
“ஏன் அம்மு அப்படி சொல்ற?”
“ஆமா உங்கள என்ன பண்றதுனே எனக்கு தெரியல.?”
“உன் மனசுல தோணுறத பண்ணு அம்மு நா ஒன்னும் சொல்லமாட்டேன்” சொல்ல அப்போது தான் இருவருக்கும் இருவர் பேசியதில் இரட்டை அர்த்தம் இருக்கிறது என்பதே தெரிய வந்தது. இருவரின் கண்களும் முகம் ஒன்றோடு ஒன்று சந்தித்து அவைகளுக்குள்ளாகவே பேசிக் கொண்டன.
“என்ன அம்மு அதான் நீயே சொல்லிட்டியே எனக்கு பண்ண தெரியல.. நீயே எல்லாம் பண்ணிடு” சொல்ல
அவள் என் நெஞ்சில் குத்தி தள்ள எங்களுக்காக அலங்கரிக்கபட்ட மெத்தையில் போய் விழ அவளும் என்னை ஒட்டியவாறு பக்கத்தில் படுத்து என் முகத்தை திருப்பி
“இன்னிக்கு நம்ம வாழ்க்கையோட முதல் நாள்.. அதனால நீங்களே அதை ஆரம்பிச்சு வைங்க” என்று சொல்ல
“நான் எத ஆரம்பிச்சு வைக்க?” எதுவும் தெரியாதது போல் கேட்க
“ஆமா அப்படியே இப்ப தான் பொறந்த குழந்தை இவரு எதுவுமே தெரியாது..” அவளும் சேர்ந்து நக்கலடிக்க
“நீ சொன்னாலும் சொல்லேனாலும் நா குழந்தை தான்” சொல்லி அவளின் சேலையை விலக்கி முந்தானைக்குள் முகம் புதைத்து அவளின் அந்த தட்டையான வயிற்றில் எங்கள் முதல் இரவின் முதல் முத்தத்தை பதித்தேன். என் முத்தம் தந்த குளிர்ச்சியான சிலிர்ப்பில் அவள் தன் மூச்சை உள்ளிழுத்து என் தலையை தன் வயிற்றோடு இறுக்கமாக அணைத்துக் கொண்டாள் அகல்யா.
அவளின் சேலை தொப்புளை விட்டு இறக்கியே கட்டியிருந்தாள். அதனால் அவளின் அழகிய குழிவான தொப்புளில் உதட்டை பதிக்க இருவருக்குமே உணர்ச்சிகள் மேலோங்க அகல்யா தன் முந்தானை விலக்கி விட்டு என் தலையை தூக்கி பிடித்தாள். மீண்டும் நெருக்கத்தில் இந்த நிசப்தமான இரவில் இருவரின் கண்களும் சந்தித்துக் கொண்டன. இருவரின் இமைகளும் உள்ளுணர்வுகளை பரிமாறிக் கொண்டன. இருவரின் இதழ்களும் ஒன்றோடு ஒன்று சேர துடித்துக் கொண்டிருந்தன. இருவரின் மூச்சுக் காற்றும் ஒன்றோடு ஒன்று மோதி சந்தித்துக் கொண்டன.
அகல்யாவின் நெற்றிப் பொட்டிலிருந்த நெற்றி சுடியை விலக்கி அவளின் அழகின் முதல் வடிவமான நெற்றிலிருந்து என் ஒற்றை விரலின் நகங்களால் மென்மையாக கோடிட்டு வருடிக் கொண்டே வர அந்த உணர்ச்சியில் உண்டான அவளின் முக பாவனைகளை அவ்வளவு நெருக்கத்தில் பார்க்கும் போது ஒரு பெண் தனக்கு பிடித்த ஆண்மகனால் உண்டாகும் காம உணர்ச்சிகளை எவ்வளவு தூரம் உள்வாங்கி அதை அனுபவித்து அவனுக்கு அதை அழகான பாவனையாக முகத்தில் காட்டுக்கிறாள் என்பது எனக்கு அப்போது தான் தெரிந்துக் கொள்ள முடிந்தது. அவளின் அந்த முக பாவனைகளை பார்க்கும் எந்த ஒரு ஆணும் அதில் மதி மயங்கி நிச்சியம் அதை இன்னும் அதிகமாக அனுபவிக்க வேண்டும் என்று தான் நினைப்பான். இல்லையெனில் அவன் ஆண்மகனே கிடையாது.