நெருப்பாலும் முடியாதம்மா நினைவுகளை அழிப்பதற்கு 4
காதலின் நான்காம் படிநிலையை வந்தடைந்தோம். ஆத்மார்த்தமான காதல். அவள் இல்லாமல் என்னால் ஒரு நொடி கூட வாழ முடியாது. அவள் முகத்தை பாராத ஒவ்வொரு நிமிடமும் சாத்தானிடம் சண்டையிடும் தருணங்கள் போல் இருக்கும்.
நெருப்பாலும் முடியாதம்மா நினைவுகளை அழிப்பதற்கு 3→
அனைவரும் அறியுமாறு எங்கள் திருமணத்தை நடத்தலாம் என்று முடிவு செய்தேன். அவள் தனது பெற்றோரின் சம்மதத்தை பெற்றாள். இப்போதும் கூட கனவில் என்னை வந்து வந்து எழுப்ப முயற்சிக்கின்றாள். போன ஜென்மத்தில் நான் பெரிய கும்பகர்ணன் ஆக இருந்திருப்பேன் போல அதான் பைரவியால் என்னை எழுப்ப முடியவில்லை.
அவளும். நானும் கணவன். மனைவியாகிய வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தோம். திருமணத்திற்கு தேவையானவற்றை வாங்க முடிவு செய்தோம்.
அவள் முக்கியமான மீட்டிங் இருக்கின்றது நீ மட்டும் போய் வா என்றாள். நானும் பொருட்கள் வாங்க சென்றேன். சுவாதி என்னுடன் உதவிக்கு வந்தாள். சாயங்காலம் ஆகி விட்டது. வீட்டிற்கு வந்து பைரவிக்கு போன் செய்தேன்.
பைரவி: சொல்லுடா செல்லம்.
நான்: என் ஹார்ட் பைரவி. பைரவி -னு கத்துது எப்ப வருவ தங்கம்.
பைரவி: உன்ன பாக்க தான்டா வந்துக்கிட்டே இருக்கேன்.
நான்: கார்லயா வர.
பைரவி: ஆமா டா ட்ரைவிங்-ல தான் இருக்கேன்.
நான்: சரி செல்லம் உனக்கு என்ன குழந்தை வேணும் ஆணா. பெண்ணா?
பைரவி:எனக்கு 10 குழந்தையாச்சும் வேணும் ஜெண்டர்-லா விசயம் இல்ல டா?
நான்: பத்து குழந்தை போதுமா உனக்கு?
பைரவி: ஒரு ஸ்கூல் கட்டனும் அதுல நம்ம குழந்தைங்க மட்டும் படிக்க.
நான்: ஏன் செல்லம். ஒரு ஊரு உருவாக்குவோம்.
பைரவி: பண்ணலாம் நீ தாங்குவியா-னு தெரியல செல்லம்.
நான்: அப்போ நான் நல்லா பண்ணலயா. ?
பைரவி: அப்படியில்ல டா பக்கி. உன்னமாதிரி ஒருத்தன் கிடைக்க நான் கொடுத்து வச்சுருக்கனும்.
நான்: நான் தான் போன ஜென்மத்தில் புன்னியம் செஞ்சு இருக்கனும்.
பைரவி: சரி. சரி எந்த ரூம்-ல இருக்க?
நான்: பெட் ரூம்ல தான். ஏன்?
பைரவி: ட்ரெஸ்ஸிங் டேபிள்-ல இருக்க ட்ராயர் அ ஓபன் பண்ணு.
நான்: கொஞ்சம் இரு. ஹா ஓபன் பண்ணிட்டேன்.
பைரவி: அங்க ஒரு கிஃப்ட் இருக்கா?
நான்: இருக்கு செல்லம்.
பைரவி: அத எடுத்து ஓபன் பண்ணு. உனக்கு தான் அது.
(ஆவலுடன் அதை பிரித்து பார்த்தேன். அதனுள் ப்ரெங்னென்சி டெஸ்டிங் கிட் இருந்தது. அது இரண்டு கோடுகளுடன் இருந்தது. )
பைரவி: என்னடா இராவணா. பாத்தியா இல்லையா?
நான்: (கண்களில் கண்ணீரோடு) வாத்த வர மாட்டிங்குது. !
பைரவி: அப்புறம் அப்பா ஆனா எப்படி நம்ம குழந்தைக்கு பேச சொல்லி தருவ?
நான்: ஏன். மொதலையே சொல்ல மாட்டியா?
பைரவி: சர்ப்ரைஸ் தான் வீட்டிக்கு வந்துட்டு சொல்லலாம்னு நினைச்சேன். ஆனா மனசு கேட்.
( ஒரு பலத்த சத்தத்துடன் ஒரு பெரிய வண்டி மோதியது போன்ற சத்தம். )
நான்: (பதட்டத்துடன்) பைரவி. பைரவி என்ன ஆச்சு?
பைரவி: ஐ லவ் யூ டா இராவணா ( சொல்லமுடியாமல் மிகவும் கஷ்டப்பட்டு சொன்னாள் ஃபோன் கட் ஆனது. )
எனக்கு உயிரே போனது அவள் வந்து கொண்டிருந்த இடத்தை நோக்கி வேகமாக எனது இரு சக்கரத்தில் சென்றேன். அதனுள் போகும் போதே ஃபோன் வந்தது. இந்த மருத்துவமனைக்கு வாங்க என்று நானும் வேகமாக அங்கே சென்றேன். டாக்டர்-ஐ பார்து என்ன ஆச்சு என்று கண்ணீருடன் கேட்டேன்.
டாக்டர்: சாரி சார். இங்க வரதுக்கு முன்னாடியே அவங்க இறந்துட்டாங்க.
நான்: (கண்ணீருடன்) இல்ல டாக்டர் நீங்க பொய் சொல்லுறிங்க. பைரவி பொய் சொல்ல சொல்லுறா அவ நல்லா தான் இருக்கா?
டாக்டர்: சாரி. She’s no more. She surrounded herself to god.
இதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவளை இறந்த நிலையில் பார்க்க மனம் வரவில்லை. அவளை கடைசியாக பார்க்க வேண்டும் என்று மனதில் நினைத்து கொண்டேன். அவளை பார்த்தேன். இறந்தாலும் தனக்கே உரிய புன்னகையுடன் இருந்தாள். அவளை கட்டியணைத்து அழுது தவித்தேன்.
பிறகு மற்ற வேலைகளை கவலையுடனும். செய்வதற்கு மனமில்லாமலும் செய்து முடித்தேன். அனைவரும் தன்னால் முடிந்த ஆறுதல் கூறினார்கள். கனவிலாவது அவள் உயிரோடு வருவாள் என நினைத்து தூங்க நினைத்தேன் தூக்கம் வரவில்லை. போதைப்பொருட்களை உபயோகிக்க தொடங்கினேன்.
தூக்கம் வரவில்லை. அதற்கு பதிலாக நிஜத்திலேயே அவளுடன் வாழ்வதாக தோன்றியது. என்னால் அவள் இல்லாமல் இருக்க முடியவில்லை. போன ஜென்மத்தில் செய்ய பாவங்களுக்கு இப்படியா தண்டனை கொடுப்பாய் கடவுளே. தற்கொலை செய்துவிடலாம் என்று முடிவெடுத்து கொண்டு மாடியின் உச்சியில் நின்று கொண்டு உங்களுக்கு என் காதல் கதையை கூறி முடிக்கிறேன்.
கடவுள். இறக்கமற்றவன். கருணை உள்ளம் இல்லாதவன் கடவுளை நம்பாதீர்கள் அவன் இறுதியில் வலியை மட்டுமே பரிசாக தருவான். இதோ குதிக்க போகிறேன். மேலே வானத்தில் பைரவியின் முகம் தெரிகிறது. இதோ. பைரவி உன்னைக்காண வந்து விட்டேன். கீழே குதித்து விட்டேன். .
நான் ஏதோ கட்டிலில் படுத்திருப்பது போன்று இருந்தது. கண்களை மெல்ல திறந்தேன். என் கனவில் அடிக்கடி வரும் அதே இடம் தான். அங்கே பைரவி ஒரு புத்தகத்தை படித்துக்கொண்டு என் அருகில் உட்கார்ந்து இருந்தாள்.
அவளை பார்த்ததும் மிகவும் சந்தோஷமாக இருந்தது. வேகமாக கண்களில் கண்ணீரோடு எழுந்து பைரவி என்று சத்தமாக கத்தினேன். அவள் வேகமாக வந்து என்னை கட்டியணைத்தாள். நானும். அவளும் கண்களில் கண்ணீர் வர வர கட்டித்தழுவினோம்.
நான்: நீ உயிரோடு தான் இருக்கியா செல்லம். இது சொர்க்கமா இல்ல நரகமா இல்லடினா கனவு உலகமா?
பைரவி:இராவணா இது நிஜ உலகம் தான்டா.
நான்: நீ தான் இறந்து போனியே அப்புறம் எப்படி உயிரோட இருக்க?
பைரவி:உனக்கு ஆக்சிடென்ட் ஆகி கோமா ஸ்டேஜ் போய்ட. அடிக்கடி கண்ண திறப்ப நான் வந்து உன்ன எழுப்ப ட்ரைப் பண்ணுவேன் ஆனா. மறுபடியும் கண்ண மூடிருவ. இப்ப தான் எழுந்துருக்க.
நான்: என் கனவுல தான் நீ என்ன எழுப்புற மாதிரி வரும். எனக்கு ஒன்னுமே புரியலை.
பைரவி: அது ஒன்னும் இல்லடா. உனக்கு ஆக்சிடென்ட் ஆகி நீ கோமா சேடேஜ் பேயிட்ட. நீ உனக்குள்ளே ஒரு உலகத்து-ல வாழ்ந்து கிட்டு இருந்தேன். உன்னுடைய கற்பனையால் ஆன உலகத்துல நீ இவ்வளவு நாள் வாழந்த டா. உனுக்குள்ளையே நீ வாழ்ந்த.
நான்: அப்போ இது தான் நிஜமா ?
பைரவி: ஆமாடா. செல்லம் இதுதான் நிஜம்.
நான்: நிஜமோ. கற்பனையோ நீ உயிரோட இருக்கைல அதுவே போதும். மொத ஹாஸ்பிடல் இருக்க மாதிரி கனவு வரும். அப்புறம் இந்த இடத்துல இருக்க மாதிரி கனவு வரும். ஹாஸ்பிடல் இருந்து எப்படி டிஸ்சார்ஜ் பண்ணாங்க.
பைரவி: நான் தான் கூட்டிட்டு வந்தேன்.
நான்: சரி. செல்லம். எனக்கு உன்ன தவிர வேற எதபத்தியும் தெரியல. என்ன பத்தி சொல்லுறியா? என்னமாதிரி வாழ்க்கை என்னுடைய-னு. எனக்கு பேம்லி இருக்கா?
பைரவி: அதான் எனக்கும் ஆச்சிரியமா இருக்கு. ! எதபத்தியும் தெரியல ஆனா என்னபத்தி மட்டும் நல்லா தெரிஞ்சு வச்சிருக்க.
நான்: உன்மையா லவ் பண்ணா எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அவங்க ஞாபகம் நம்ம-ல விட்டு போகாது. இது சாதரண கேமா தான.
பைரவி: உன்னமாதிரி ஒருத்தன் கிடைக்க நான் தான் புண்ணியம் பண்ணிருக்கனும்.
நான்: சரி. அதெல்லாம் விடு எனக்கு என்னாச்சு நான் யாரு?
பைரவி: நீ ஒரு கம்பேனியேட Founder. உனக்கு அப்பா. அம்மா யாரும் கிடையாது. சின்ன வயசுல இருந்தே அனாதை ஆசிரமம்-ல தான் வளந்த. உன்ன அங்க வளர்த்தவர் சக்தி-னு ஒருத்தர். அவர உனக்கு ரொம்ப பிடிக்கும். நல்லா படுச்சு யாரோட உதவியும் இல்லாம நீ Founder ஆன.