யட்சி 19
கீர்த்தனாவிடம் உண்மை எல்லாவற்றையும் சொல்லிவிடலாம் எனத் தோன்றியது. அவளிடம் எதையும் மறைப்பது நல்லதல்ல. ஏனென்றால், அவள் தான் யாமினி விஷயத்தில் எனக்கு உதவி செய்தாக வேண்டும்.
யட்சி 18
“அன்னைக்கு யாமினி கிட்ட நா பேசும் போது, அவ பாஸ்ட்ல நடந்ததயெல்லாம் சொன்னா ன்னு சொன்னேன்ல.”
“ஹ்ம்ம்.”
“அது வந்து..”
“அது என்னன்னு எனக்கும் தெரியும். வருண் கிட்ட கேட்டேன். எல்லாத்தையும் சொல்லிட்டான்.”
“அப்போ நல்லதா போச்சி. அந்த விஷயம் நடந்ததுல இருந்து லவ் னாலே வெறுப்பா இருக்குன்னு சொன்னா.”
“ஆமா. அப்டி ஒரு சம்பவம் நடந்தா யாரா இருந்தாலும் ஆம்பளைங்களையே வெறுப்பாங்க.”
“அவன் ஒருத்தன் பண்ண தப்புக்கு ஆம்பளைங்க எல்லாரையும் எதுக்கு வெறுக்கணும்?”
“வெறுக்காம என்ன பண்ணுவாங்க? அவங்க அக்காவ அவ கண் முன்னாலயே ரேப் பண்ணி கொன்னா அத நேர்ல பாத்த அவளுக்கு எப்டி இருக்கும்?”
“நீ என்ன சொல்ற? ரேப் பண்ணி கொன்னாங்களா?”
“ஆமா. அவ உன்கிட்ட சொல்லலையா?”
“அவ என்கிட்ட அதெல்லாம் பத்தி சொல்லல. கொன்னுட்டாங்கன்னு தான் சொன்னா. உண்மையிலேயே அங்க என்ன நடந்திச்சு? சொல்லு.”
“காலேஜ் முடிஞ்சி யாமினி அக்காவுக்காக செக்யூரிட்டி ரூம்ல காத்துட்டு இருக்கும் போது, அந்த சைக்கோ இன்னும் ரெண்டு ப்ரெண்ட்ஸோட வந்திருக்கான். அதுல ஒருத்தன் வீடியோ பண்ண, இன்னொருத்தன் யாமினிய பிடிக்க அந்த சைக்கோ அங்க இருந்த கயிற எடுத்து கைய காலையெல்லாம் கட்டிவச்சி அவள ரேப் பண்ண ரெடியாகி இருக்கான். அப்போ தான் அவங்க அக்கா உள்ள வந்து அங்க இருந்த ஒரு இரும்பு ராட எடுத்து அவங்க மூணு பேரையும் அடி அடின்னு அடிச்சிருக்கா. செம்மையா அடி விழுந்த கோபத்துல அந்த இரும்பு ராட அவகிட்ட இருந்து புடிங்கி எடுத்து அவள திருப்பி அடிச்சிருக்காங்க. அப்புறம் அவ முடியாம கீழ விழ இன்னும் கோபம் அடங்காம அந்த மூணு பேரும் அவள யாமினி கண் முன்னாலேயே கதறக் கதற ரேப் பண்ணி இருக்காங்க. அப்புறம் அந்த சைக்கோ யாமினியையும் ரேப் பண்ண ட்ரை பண்ணி இருக்கான். நல்ல வேளையா அந்த டைம் பாத்து செக்யூரிட்டி அங்கிள் திரும்ப வந்து ரெண்டு பேரையும் அவங்ககிட்ட இருந்து காப்பாத்தி இருக்காரு. ஆனா, தலைல ஹெவியா அடி பட்டிருந்ததனால ஹாஸ்பிடல் கொண்டு போனதுக்கு அப்புறமா கூட யாழினி அக்காவ காப்பாத்த முடியலயாம். அதுக்கப்புறம், அந்த மூணு பேரையுமே போலீஸ் அர்ரெஸ்ட் பண்ணி ஜெயில்ல போட்டிருக்காங்கலாம். இந்த செய்தி அந்த நேரம் டீவில, பேஸ்புக்ல, நியூஸ் பேப்பர்ல ன்னு ரொம்ப வைரலா இருந்திருக்கு. நமக்குத் தான் எதுவுமே தெரியல.”
கீர்த்தனா கூறி முடித்ததும் எனக்கு தலையெல்லாம் சுற்ற ஆரம்பித்தது. இப்படி ஒரு கசப்பான சம்பவத்திலிருந்து வெளியே வருவது என்பது யாருக்குமே முடியாத ஒரு காரியம் தான்.
நான் கவலையுடன் பக்கத்தில் இருந்த பெஞ்சில் அமர்ந்தேன். கீர்த்தனா தொடர்ந்தாள்.
“நீ அவகிட்ட லவ்வ சொல்லும் போது இதெல்லாம் நடந்து முடிஞ்சு ஒரு 5 மாசம் கூட ஆகி இருக்காது.”
“ஹ்ம்ம்”
“அந்த டைம்ல அவ எப்டி உன்னோட காதல ஏத்துக்குவா?”
“ஹ்ம்ம். நா பண்ணது தப்புத்தான். எனக்கு என்ன தெரியும் அவ லைஃப்ல நடந்தது பத்தி? ஆனாலும், நா அதுக்கு அவகிட்ட சாரி சொல்லிட்டேன்.”
“அது சரி. அப்புறம் எதுக்கு உன்னமாதிரி ஆளுங்க கூட பேசுறதே பெரிய விஷயம் ன்னு கோபமா சொன்னா?”
“அது வந்து..”
“இழுக்காம சொல்லு”
“அன்னைக்கு… கார்ல… அவள நா…. கிஸ் பண்ணிட்டேன்.”
“என்னடா சொல்ற? லூஸு”
“ஆமா.”
“எதுக்கு கிஸ் பண்ண?”
“அவ பழசயெல்லாம் மறக்க முடியலன்னு சொன்னா. நைட்ல அது பத்தின நினைப்பு வராம ஒரு நாளும் தூங்குனதே இல்லையாம்.”
“அதுக்கு?”
“விக்கல் வந்தா ஏதாச்சும் அதிர்ச்சியான சம்பவங்கள் நடந்தா விக்கல் நின்னுடும்ல! அது மாதிரி நைட்ல அது பத்தின நினைப்பு வராம இருக்க நா அப்டி பண்ணேன்.”
“அப்டி பண்ணா?”
“நைட் தூங்கும் போது பழைய ஞாபகங்களுக்குப் பதிலா இனிமே நா கிஸ் பண்ணது தான் ஞாபகம் வரும்.”
“லூசாடா நீ? அப்டி பண்ணா இப்டி நடக்கும் னு யார் சொன்னாங்க?”
“யாரும் சொல்லல. நானா தான் அப்டி நினைச்சி பண்ணேன்.”
“ஆமா. பெரிய சைக்கோலஜிஸ்ட் இவரு! அட பைத்தியமே. அவ இஷ்டம் இல்லாம நீ அப்டி பண்ணா, நீயும் அவ அக்காவ கொல பண்ணுன அந்த சைக்கோ மாதிரின்னு தான் நினச்சி இருப்பா. இப்ப அவன் இடத்துல தான் நீயும் இருப்ப. லூஸு.”
“என்னடி சொல்ற?”
“ஆமா. அதனால தான் அவ அப்டி கோபமா பேசி இருக்கா.”
“இப்ப என்னடி பண்றது? அவ அன்னைல இருந்து என்கிட்ட பேசவே இல்ல. சோகமாவே இருக்கா.”
“ஒழுங்கா மரியாதையா போய் அவகிட்ட மன்னிப்புக் கேளு. அவ மன்னிக்கலன்னா கால்லயாச்சும் விழுந்து மன்னிப்புக் கேளு.”
“ஹ்ம்ம்.”
“ஆனா எல்லா விஷயமும் தெரிஞ்ச மாதிரி காட்டிக்கொள்ளாத. தெரிஞ்சா வருணத் தான் திட்டுவா.”
“ஹ்ம்ம்.”
நான் அவளிடம் மன்னிப்புக் கேட்க தயாரானேன். அவள் ரூமில் தனியாக இருந்த நேரம் பார்த்து நான் அவளருகில் சென்றேன்.
“யாமினி”
அவள் எதுவுமே பேசாமல் போனை நோண்டிக் கொண்டிருந்தாள்.
“ப்ளீஸ் யாமினி. என்கிட்ட பேசுங்க.”
“…………..”
“நா பண்ணது ரொம்பப் பெரிய தப்பு. தயவுசெஞ்சு என்ன மன்னிச்சிடுங்க யாமினி. ப்ளீஸ்.”
“…………..”
“ஐ ஆம் வெரி வெரி வெரி சாரி யாமினி. ப்ளீஸ்”
“…………..”
“இடியட் மாதிரி யோசிச்சி இப்டி ஒரு தப்ப பண்ணிட்டேன் யாமினி. தயவு செஞ்சி என்ன மன்னிச்சிடுங்க. உங்க பாஸ்ட்ல உண்மையிலேயே என்ன நடந்திச்சிதுன்னு இன்டர்நெட்ல தேடிப் பாத்து தெரிஞ்சிகிட்டேன். உடனே உங்களுக்கு நா பண்ணது எவ்வளவு வலிச்சிருக்கும்னு புரிஞ்சிது. அதுக்காக உங்க கால்ல விழுந்து மன்னிப்புக் கேக்கத்தான் இப்ப நா இங்க வந்திருக்கேன்.”
அவள் போனை பக்கத்தில் வைத்துவிட்டு என்னைப் பார்த்தாள்.
“அன்னைக்கு என்ன நடந்துதுன்னு முழுசா நா உங்ககிட்ட சொல்லல தான். ஆனா அவன் என்ன ஃபோர்ஸ் பண்ணி கிஸ் பண்ணான் னு உங்ககிட்ட சொன்னேன் தானே. அதுகப்புறம் கூட உங்களுக்கு என்ன அப்டி பண்ண தோணி இருக்குன்னா உங்களுக்கும் அவனுக்கும் என்ன வித்தியாசம்?”
“அது வந்து…. ஏதோ ஒரு மக்குத்தனமான யோசனைல அப்டி பண்ணிட்டேன். ஐம் சாரி”
“சரி ஓகே. விடுங்க. இனிமேலாச்சும் பொண்ணுங்க உணர்வுகளுக்கும் கொஞ்சம் மதிப்புக் குடுங்க.”
“சாரி யாமினி. என்ன மன்னிச்சிடுங்க. ப்ளீஸ்.”
“நோ. இத நா எப்பவுமே மன்னிக்கவே மாட்டேன். எனக்கு கல்யாணம் ஃபிக்ஸ் பண்ணி இருக்குன்னு தெரிஞ்சும் கூட நீங்க இப்டி பண்ணத என்னால மன்னிக்கவே முடியாது. இது விக்ரமுக்கு தெரிஞ்சா என்ன ஆகும் தெரியுமா?”
அவள் விக்ரம் பத்தி சொன்னதும் எனக்கு ரொம்பவே எரிச்சலாக இருந்தது. இருந்தாலும் பொறுத்துக்கொண்டு,
“அது எனக்கும் உங்களுக்கும் உள்ள நடந்த விஷயம். வேற யாருக்குமே தெரியாது. தயவு செஞ்சி அவர்கிட்ட இதெல்லாம் பத்தி சொல்லிடாதீங்க.”
“நா எதுக்கு சொல்லப் போறேன். சும்மாவே அவருக்கு உங்ககூட டூர் வந்தது பிடிக்கல. இதையும் சொல்லி அவர கோபப்பட வைக்க எனக்கென்ன பைத்தியமா என்ன?”
“ஓஹ். கல்யாணத்துக்கு ஓகே சொல்லி ஒரு நாள்லயே அவரு அதெல்லாம் சொன்னாரா உங்ககிட்ட? நீங்க இத என்கிட்ட அன்னைக்கே சொல்லி இருந்தா உங்களையும் அவர் கூடவே அனுப்பி வச்சிருப்பேன். இல்லன்னா கார் சாவிய உங்க தம்பிக்கிட்ட குடுத்துட்டு நா மட்டும் தனியா ட்ரைன்லயோ பஸ்லயோ ஊருக்கு கிளம்பி இருப்பேன். அட்டப் பூச்சி உங்கள கடிச்சப்போ கூட எதுவுமே பண்ணாம சும்மா இருந்திருப்பேன்.”
அவள் அமைதியாக இருந்தாள். நான் தொடர்ந்தேன்.
“உங்க பாஸ்ட் பத்தி விக்ரமுக்கு தெரியுமா?”
“இல்ல.