மீண்டும் அவளோடு 19
சென்ற பகுதியின் தொடர்ச்சி…
“என்ன சொன்னிங்க?” மதி கேட்க
“இல்ல பகல்ல கனவு கண்டா கூட பலிக்கும் சொன்னேன்..”
“அப்படியா?”
“ஆமா.”
“அப்படி என்ன கனவு கண்டிங்க?” கேட்க
மீண்டும் அவளோடு 18→
“இதோ இப்ப உன் பர்த்டேக்கு கேசரி ஊட்டிவிட்ட மாதிரியே நாம லவ் பண்ணும் போது உன் பர்த்டே அன்னிக்கு ஊட்டிவிட்ட. அத தான் நெனச்சு பாத்திட்டு இருந்தேன்.. நெனச்சு பாக்க அவ்வளவு நல்லா இருந்துச்சு. நெஜத்துல நடக்குமா யோசிச்சிட்டு இருந்தேன்.”
“நல்ல வேளை நெனச்சது நடந்திருச்சு” என்றேன்..
“அய்யோ போங்க.. ரொம்ப மோசம்.. இன்னுமா அதெல்லாம் நியாபகம் வச்சியிருக்கீங்க.. ம்ம்.. பெரிய ஆளு தான்.” சொல்லிட்டு
“சரி மீதி கேசரிய சாப்பிட்டுங்க” சொல்லிட்டு நகர ‘மதி’ என்றதும் என்னை விட்டு விலகி நகர்ந்து சென்றவள் திரும்பி பார்த்து
“என்னங்க” என்றாள்..
“இல்ல ஒன்னுமில்ல என்றேன்..” ஆனால் நான் மனதில் நினைத்து மீதியிருக்கும் கேசரியை அவளின் கையால் சாப்பிட்டால் நன்றாக இருக்கும் தோன்றியது. அதனால் அவளை கூப்பிட்டேன். பின் ஏதோ உணர்வு திடீரென வந்து மனதை மாற்றியதால் ஒன்றுமில்லை என சொல்ல வேண்டியதாக ஆயிற்று.. ஆனால் மதி நான் கூப்பிட்டதும் திரும்பி வந்து என் கையில் இருந்த கிண்ணத்தை வாங்கி
“ம்ம் இந்தாங்க சாப்பிடுங்க” அவளே மீதியிருந்த கேசரியை குடுக்க ஆரம்பித்தாள்.. எனக்கு ஆச்சரியமாக இருந்தது.. இத்தனை வருடங்கள் கழிந்தாலும் என் மனநிலைமை பற்றியும் நான் மனதில் நினைத்ததை சொல்லாமலே சரியாக கண்டுபிடித்துவிட்டாள்.. இது எப்படி சாத்தியம் என்பது அப்போதைக்கு புரியாத புதிராக இருந்தது. அந்த ஆச்சரியத்துடனே மீதியிருந்த கேசரியை மதியின் கையால் சந்தோஷமாக சாப்பிட்டேன்..
“மதி எப்படி என் மனசுல நெனச்சத கரைக்டா கண்டுபிடிச்ச.?”
“ஏன் உங்க மனசுல இருக்குறத என்னால கண்டுபிடிக்க முடியாதா என்ன?”
“முடியும் தான் பட்.. அவ்வளவு எக்ஸ்ஆக்டா எப்படி?”
“எப்படினா? உங்க ஆசையை நானா கண்டுபிடிக்கல. நீங்க தான் உங்க வாயால சொன்னிங்க.. அத வச்சு தான் கண்டுபிடிச்சேன்..”
“ம்ம்.. சூப்பர்” சொல்ல
“எது சூப்பர்?”
“எல்லாமே தான்.. உன் ஃபைன்டிங் அப்பறம் உன் கேசரி எல்லாம் தான்.”
“ஓ.. அப்படியா.. கேசரி இல்ல.. விரல்ல இருக்கிறத தான்.. வேணும்னா விரல்ல இருக்குறத சாப்பிட்டுகோங்க” மதி சொல்ல அவளை இன்னும் ஆச்சரியமாக பார்த்தேன்..
“ம்ம்.. சீக்கிரமா சாப்பிடுங்க.. காஞ்சு போய்ட போகுது” சொல்ல மதியின் விரலில் ஒட்டியிருந்த கேசரி பருக்கைகளை காதலிக்கும் போது சப்பியது போலவே ஒவ்வொரு விரலையும் நிதானமாக சப்பினேன். அதே சமயம் விரலை அழுத்தமாக சப்பினேன்..
“போதுமா?” மதி கேட்க தலை தூக்கி அவளை என்ன என்பது போல் பார்க்க
“போதுமா?” கேட்டேன்..
“நீ எத போதுமா கேட்ட தெரியல.. ஆனா எதுவா இருந்தாலும் போதாது எனக்கு.. இன்னும் வேணும் தான் தோணுது..”
“தோணும்.. தோணும்.. சரி போதும் விடுங்க..” அவளின் கையை வாயில் இருந்து அவளாகவே எடுத்துக் கொண்டாள்.. பின் மதி
“ரொம்ப நாள் கழிச்சு கோயிலுக்கு போகலாம் இருக்கேன்.. நீங்களும் வரிங்களா?” கேட்க எனக்கு அது அடுத்த ஆச்சரியமாக இருந்தது..
“நா.. நா.. எப்படி மதி உன்கூட வர முடியும்.”
“முடியும் நெனச்சா எல்லாமே முடியும்.. சரி வீட்டுக்கு போய் வேற நல்லா டிரஸ் போட்டு அப்படியே கால்டாக்ஸி புக் பண்ணிடுங்க..” ரொம்ப உரிமை எடுத்து ஏதோ அவளுடைய கணவனை போல் பேசினாள்.
“கால்டாக்ஸி ஓகே.. ஆனா எங்க போறோம்..?”
“அதான் சொன்னேன்னே கோவிலுக்கு.”
“அதெல்லாம் சரி தான்.. கோவிலுக்கு பேரு.. ஏரியா இதெல்லாம் இல்லையா?”
கேட்க
“ஓ. அதுவா திருவேற்காடு போதுமா.. நீங்க ரெடி ஆகி உங்க வீட்டிலே இருங்க.. நா வரேன்..” சொல்லிட்டு அவளின் பெட்ரூமை நோக்கி நடந்தாள்.. நான் இந்த ஆச்சரியத்தில் இருந்து மீள முடியாமல் தடுமாறியபடி என் வீட்டிற்கு வந்து மதி சொன்னபடி ரெடியாகி அவளுக்காக காத்திருந்தேன்..
மதி அடுத்த பத்து நிமிடத்தில் பச்சை நிற புடவையுடன் பளிச்சென்று முகத்தில் சிரிப்புடன் வந்தாள்.. வீட்டிற்குள் வந்ததும்.
என்னை கிழக்கு பக்கமாக நிற்க சொல்ல நானும் அவள் சொன்னதினால் கிழக்கு பார்த்து நிற்க கண் இமைக்கும் நொடிக்குள் என் காலில் விழுந்து விட்டாள்.. மதி இப்படி ஒன்றை செய்வாள் என நான் கனவிலும் நினைத்து பார்த்ததில்லை.. பின் சுதாரித்து
“மதி என்ன பண்ற எந்திரி முதல்ல.”
“நீங்க ஆசிர்வாதம் பண்ணுங்க.. நா எந்திரிக்கிறேன்” என்றாள்..
“நீ ரொம்ப வருசத்துக்கு கஷ்டம் இல்லாம சந்தோஷமா இருக்கனும்.” தலையில் கை வைத்து முழுமனதுடன் சொல்ல அவளும் சந்தோஷ முகத்துடன் எழுந்தாள்..
“என்ன திடீர்னு இப்படியெல்லாம் பண்ற.. எனக்கு என்ன சொல்றது தெரியல..” என்றேன்.
“இன்னிக்கு நீங்க ஒன்னும் சொல்ல வேணாம்.. நா சொல்றது கேட்டு அதுப்படி நடந்தா போதும். சரியா?”
“ம்ம்.. மகாராணி நீங்களே சொன்ன பிறகு அதை மீற முடியுமா?”
“சரி வாங்க போகலாம்.”
“போலாம்.. ஆனா சேந்து வேணாமே.. தனிதனியா போகலாம்.. அதான் கொஞ்சம் உனக்கும் நல்லது நினைக்கிறன்.”
“இன்னிக்கு நா சொன்னபடி தான் நடக்கனும்.. நாம ரெண்டு பேரும் சேந்து தான் போறோம்.. இது மகாராணியோட உத்தரவு” சொல்ல அந்த சமயம் பார்த்து என் மொபைல் அடித்தது.. அதை எடுத்து பேச
“ஹலோ சார் கால்டாக்சி புக் பண்ணியிருந்தீங்கள.. நீங்க சொன்ன அபார்மெண்ட்க்கு வந்துட்டேன்..”டிரைவர் சொல்ல
“ஓ.. அப்படியா.. இதோ வரேன்” சொல்லி காலை கட் பண்ணினேன்..
“நட மதி வீட்டை பூட்டிட்டு வரேன்..”
“அதலாம் முடியாது.. வீட்ட பூட்டுங்க.. நா வெயிட் பண்றேன்.” பிடிவாதமாக இருக்க இனி என்னவெல்லாம் நடக்க போகுதோ என மனதில் நினைத்தபடி வீட்டை பூட்டினேன்..
காரில் போகும் போது கூட என் கை விரல்களுக்குள் கையை கோர்த்து பிடித்தபடி தான் வந்தாள்.. இன்று அவளின் செய்கைகள் எல்லாம் சற்று வித்தியாசமாக இருந்தாலும் நானாக கேட்டு அவளின் மனதை கஷ்டபடுத்திட கூடாது அமைதியாக இருந்தேன்..
அதுவும் இல்லாமல் இன்று அவளின் பிறந்தநாள்.. அவளின் சந்தோஷத்தை கெடுக்க விரும்பவில்லை. மாறாக அவள் தான் அடிக்கடி என் முகத்தை பார்த்து சிரிப்பது என் கையில் முத்தமிடுவது என எதிர்பார்த்திடாத விஷயங்களை எல்லாம் செய்துக் கொண்டே வந்தாள்.. கோவிலுக்கு சாமி எல்லாம் கும்பிட்டு முடித்த பிறகு அந்த பிரகாரத்தின் உள்ளே உட்காந்திருந்தோம்.. அப்போது மதி
“இன்னிக்கு தான் நா ரொம்ப சந்தோஷமா இருக்கேன்..”
“ம்ம்.”
“ஏன்னு கேக்கமாட்டிங்களா?” மதி கேட்க
“சரி கேக்குறேன் ஏன் சொல்லு?”
“ஏன்னா நீங்க மறுபடியும் என் வாழ்க்கையில வந்ததுனால தான்.”
“ம்ம்.”
“உங்கள மறுபடியும் பாப்பேன் நெனக்கல.. இப்படி உங்க கூட உட்காந்து பேசுவேன் நெனக்கல.. இதெல்லாம் நெனச்சு பாக்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கு..”
“நானும் தான் இதெல்லாம் நடக்கும் நெனக்கல..”
“உங்ககிட்ட ஒன்னும் சொல்லனும்.” என்றாள்..
“ம்ம்.. சொல்லு மதி.”
“ஆனா அத எப்படி சொல்றது தான் தெரியல.?”
“ஏன் ஏதாவது உதவி தேவைபடுதா? சொல்லு பண்றேன்.”
“அய்யோ அதெல்லாம் இல்லீங்க.. இது வேற?”
“வேறனா பணம் ஏதாவது தேவைபடுவதா? சொல்லு தரேன்”
“பணமெல்லாம் நெறலய இல்லைனாலும் தேவைக்கு போதும்ன்ற அளவுக்கு இருக்குங்க.. இது வேற ஒன்னு அதான் எப்படி சொல்றது தெரியல?” தயக்கத்துடன் சொல்ல
“அப்படி என்ன சொல்ற போற? இவ்வளவு தயங்குற?”
“இது தயக்கமா இல்லமா? இல்ல கூச்சமா? வெட்கமா? தெரியல.