மீண்டும் அவளோடு 7
சென்ற பகுதியின் தொடர்ச்சி…
மீண்டும் மனசாட்சியோடு…
“ஹே.. இருக்கியா?” கேட்டதும்..
“ம்ம். எங்கேயும் போகல. இங்க தான் இருக்கேன் பா. சொல்லு..”
“ஏதோ மதி திரும்பி மீட் பண்ண ஐடியா குடுக்குறேன் சொன்ன”
மீண்டும் அவளோடு 6→
“ஐடியா இல்ல..”
“ஹின்ட்.”
“ம்ம். அதான். என்ன ஹின்ட் அது?”
“அது ஒன்னுமில்லப்பா.. பொதுவா இந்த பொண்ணுங்க சொல்றது ஒருமாதிரி இருக்கும். நடந்துக்கிறது ஒருமாதிரியா இருக்கும். இப்ப உன் விஷயத்துல அப்படி தான் நடந்திருக்கு.”
“அப்படி என்ன நடந்திருக்கு.?”
“உன் மதி அடுத்த சந்திப்புக்கு நீ கேக்குறதுக்கு முன்ன அவளே உன்ன வர வச்சு பாக்கனும் நெனச்சியிருக்கா”
“அப்படியா சொல்ற.?”
“ம்ம்.. ஆமா. அதுல என்ன சந்தேகம்?”
“நீ எத வச்சு சொல்ற?”
“உன்னைய சும்மாவா அனுப்பிவிட்டா?”
“ம்ம்.. ஆமா.. நீ நெனக்கிற மாதிரிலாம் எதும் அவ தந்து அனுப்பிவிடல..”
“டே.. நீ காதலிக்கும் போதே உனக்கும் எதும் பெருசா கிடைக்கல.. இப்ப பாத்ததும் நீ நெனச்சதுல குடுத்துருவா வேற நெனப்பு இருக்கா உனக்கு.. இந்த பாரு.. அப்படி ஏதாவது மனசுல இருந்த அத இப்பவே டெலிட் பண்ணிடு.. சரியா?”
“ஸ்ஸ்ஸ். எப்பா மனசாட்சி ஏற்கெனவே நானே குழம்பியிருக்கேன்.. நீ வேற ஏன் இன்னும் கொஞ்சம் குழப்பிட்டு இருக்க..”
“சரி விடு.. நீ தான் ஓல்ட் டிக்கெட் ஆச்சே.. ஹின்ட் குடுத்தா புரிஞ்சுக்குவ பாத்த.. நீ ஏதோ இந்த ஜென்ரேஷன்ல லவ் பண்ற ஆளு மாதிரி பாத்ததும் எல்லாம் நடக்கனும் நெனக்கிற.. ம்ம்.. என்ன பண்ண உன்னை சொல்லி குற்றமில்லை.. என்னை சொல்லி குற்றமில்லை.. எல்லாம் காலம் செய்த கோலமடா” பாட்டு பாட
“ஹே.. மனசாட்சி தேவையில்லாம நீயா என் முன்னால வந்து எதை எதையோ பேசி கேட்டு குழப்பிவிட்டு இப்ப ஹாயா நின்னு பாட்டு பாடி இருக்க.. ஆனா சொல்றேன் சொன்ன விஷயத்தை மட்டும் தெளிவா சொல்லிடாத..” கொஞ்சம் கோவமாக பேச
“அட என்ன நீ இதுக்குலா போய் கோவிச்சா எப்படி லவ் சக்கஸ் ஆகும்.. சரி மேட்டர் என்னானு டேரக்ட்டாவை சொல்லிடுறேன்..” மனசாட்சி சொல்ல
“ம்ம். சொல்லு..”
“உன் மதி உன் கையில ஒன்னு குடுத்தவிட்டால..”
“ம்ம்.. ஆமா டப்பா. அது கூட இந்த சோபால தான் இருக்கு பாரு..”
“ம்ம்.. குடுத்தத திருப்பி குடுக்கனுமா இல்லையா?”
“ம்ம். ஆமா.. குடுக்கனும்.. அட ஆமால திருப்பி குடுக்கறப்ப ஒரு தடவ பாத்து பேசலாம்ல.”
“யப்பா.. இப்பயாச்சும் புருஞ்சுச்சே..”
“ம்ம்.. ஓகே பட்.. இது கொஞ்சம் ஓல்ட் டெக்னிக்கா இல்ல..”
“ஆமா.. ஓல்ட் தான்.. ஏன்னா உன் லவ் ஓல்ட் தான.. அதுக்கு இந்த மாதிரி ஐடியா தான் ஓர்க்அவுட் ஆகும்..”
“இதையே கரைக்ட்டா பண்ணு.. அப்ப தான் அடுத்த தடவ மீட் பண்ண ஏதாவது இந்த மாதிரி ஹின்ட் குடுக்க சான்ஸ் இருக்கு.. ஓகே பெல்ஸ் ஆப் லக்” சொல்லி மனசாட்சி மறைந்தது.
மனசாட்சி மறைந்ததும் அடுத்த முறை மதியை சந்திக்க வழி கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் கொஞ்சம் நிம்மதியாக உட்காந்திருந்தேன். மதி குடுத்த டப்பாவை எடுத்து திறந்து பார்த்தேன். அந்த டப்பாவிற்குள் 3பணியாரமும் அது மூழ்கும் அளவிற்கு கொஞ்சம் பாலும் ஊற்றியிருந்தது.
அந்த பணியாரத்தை எடுத்து பாதியாக பிய்த்து வாயில் வைத்து சாப்பிட்டேன்.. அது பாலில் ஊறியதால் மிகவும் மென்னையாக அதே சமயம் அருமையான சுவையுடன் இருந்தது. நீண்ட வருடத்திற்கு பின் இது மாதிரி அருமையான ஓர் உணவை சாப்பிடுகிறேன். இது மாதிரியான பால் பணியாரத்தை எல்லாம் என் மனைவி உயிருடன் இருந்த போது அவள் கையால் சாப்பிட்டது. அவள் இறந்த பிறகு பெரும்பாலும் சாப்பாத்தி தான்.
இப்போது தான் இதுமாதிரி சாப்பிடுகிறேன். அதுவும் மதி கையால் செய்த பணியாரத்தை சாப்பிடும் போதே மனதிற்குள் ஒருவிதமான சுகமான உணர்வு பரவியது.
அந்த உணர்வை அனுபவித்துக் கொண்டே அந்த பணியாரத்தை சாப்பிட்டுக் கொண்டிருந்த எனக்கு என்னுடைய காதல் நாட்களில் இது மாதிரி அவளின் கையில் செய்த பணியாரத்தை அவளே எனக்கு ஊட்டிவிட்டு இருக்கிறாள் என்ற அந்த காதல் நினைவுகள் நினைவுக்கு வந்ததுமே உணர்ச்சியில் உடலும் மனமும் உற்சாகத்தில் துள்ளி குதித்தது..
ஊருக்குள்ளே வரும் அந்த ஒத்தையடி பாதையில் இருபுறமும் சில பனைமரங்கள் இருக்கும். அதில் இடபுறம் இருக்கின்ற ஐந்தாவது பனைமரம் தான் எங்களின் காதல் ஸ்பாட். பெரும்பாலான எங்களின் சந்திப்பு இந்த ஐந்தாவது பனைமரத்திற்கு கீழ் தான் நடந்திருக்கிறது. அன்றும் அப்படிதான்.
அன்று மதிக்கு காலேஜ் இல்லை. இது மாதிரி விடுமுறை நாட்களில் சந்திப்பு எதுவும் இருக்கிறதென்றால் காலையில் எங்களின் கடைக்கு வருவது போல் வந்து என்னிடம் சொல்லிவிடுவாள். அன்றும் அப்படி தான் காலையில் கடைக்கு வந்து கண் ஜாடையிலே சொல்லிட்டு போனாள்.
நானும் அவளுக்காக சில நிமிடங்கள் காத்திருந்தேன். இதோ மதி சிகப்பு தாவணியில் தேவதை போல் வருகிறாள். அவளின் கையில் ஒரு சிறிய டிபன் பாக்ஸூம் இருந்தது.
என்னருகில் வந்ததும் ஒரு சிரிப்பை மட்டும் உதிர்த்துவிட்டு அந்த மரத்தின் அடியில் அவளாகவே உட்காந்துக் கொண்டாள்.. நான் அவளை பார்த்ததும் அவள் ‘என்ன’ என்பது போல் புருவத்தை தூக்கி காட்டி அசைக்க ‘ஒன்றுமில்லை’ என்பது போல் தலையை அசைத்தும் நின்றுக் கொண்டிருக்க அவளே என் கையை பிடித்து கீழே இழுக்க அவளை ஒட்டி உட்காந்தேன்…
“மகாராணி டிரஸ் எல்லாம் புதுசா இருக்கே.. எதுவும் விசேஷமா?”
“ஏன் அப்படி கேக்குறீங்க..?”
“இல்ல தாவணி புதுசா இருக்கே அதான் கேட்டேன். எதவாது விசேஷமா?”
“ம்ம்.. விசேஷம் தான்.” சொன்னதும்
“உன்ன பொண்ண பாக்க வரப்போறாங்கள” கிண்டலுக்கு கேட்க
“இந்த கிண்டலு தான் வேணாம்ங்குறேன்..”
“சரி பின்ன என்ன விசேஷம் சொல்லு”
“இன்னிக்கு என் அம்மா அப்பா கல்யாண நாள்.”
“ஓ.. அப்டியா.. ம்ம்.. நம்ம கல்யாணம் எப்போ?”
“அது என் கையில இல்ல. உங்க கையில தான் இருக்கு..” சொல்லிட்டு என் கையை பிடித்துக் கொண்டாள்..
“என் கையில இருக்கா.. இங்க பாரு. என் கையே உன் கையில தானா இருக்கு..” சொன்னதும்
“அய்யோ.. உங்களுக்கு எப்ப பாரு கிண்டல் தான். சின்ன பையன் மாதிரி கிண்டல் பண்ணிட்டு இருக்காதிங்க.. கொஞ்சமாச்சும் ஆம்பள மாதிரி நடந்துக்க பாருங்க..”
“சரி உன் ஆம்பளையானுக்கு என்ன கொண்டு வந்திருக்க” கேட்டுக் கொண்டே அவளின் மடியில் தலையை வைத்து படுக்க செல்ல என் தோள்பட்டையில் கை வைத்து தடுத்து நிறுத்தி சுற்றியிலும் ஒரு பார்வை பார்த்துவிட்டு பாவடையை கீழே நன்றாக இழுத்து விட்டு காலை நீட்டி என் தலையை மடியில் வைத்து படுக்கவிட்டாள்..
“அதான் ஆள் யாரும் வரலைல பின்ன ஏன் இப்படி பயந்து சாகுற..”
“எல்லாம் நம்ம காதலுக்காக தான். திடீர்னு ஆள் வந்து யாரும் நாம ஒன்னா இருக்குறத பாத்தா சிக்கல்ல முடிஞ்சிடும். அந்த பயம் தான் வேற ஒன்னுமில்ல..”
“சரி.. அந்த டப்பால என்ன இருக்கு..”
“இந்தாங்க.. பால் பணியாரம்..”
“பால் பணியாரமா?”
“ம்ம். ஆமா..”
“யாரு பண்ணது..”
“இதுல இருக்குறது நா பண்ணது.?”
“பார்ரா..?”
“எனக்காகவா பண்ண?”
“பின்ன வேற யாருக்காம்?”
“நா கூட வேற ஆம்பளைக்கு நெனச்சேன்.”
“ம்ம்.. நெனப்பிங்க.. நெனப்பிங்க.” சொன்னதும் அவளின் முகத்தை பார்த்தேன். அவளின் முகம் கோவமா எதுவும் இருக்கிறதா? என பார்த்தேன். அப்படி எதுவும் இல்லை. எப்போதும் போல தான் வைத்திருந்தாள்..
“என்ன என் முகத்தையே அப்படி ஊத்து பாக்குறீங்க.. ஏன் இதுக்கு முன்ன என் முகத்த பாத்ததேயில்லையா?”
“அது நெறைய தடவ பாத்தியிருக்கேன்.