மீண்டும் அவளோடு 13
சென்ற பகுதியின் தொடர்ச்சி…
என் உதடும் மதியோட உதடும் கிட்டதட்ட ஒன்றின் மேல் ஒன்றாக ஒட்டியும் ஒட்டாமலும் இருந்தது. நாங்கள் இருவரும் இந்த ஒரு வருடத்தில் இதற்கு முன் சந்தித்து பேச மட்டும் தான் செய்திருக்கிறோம். அதிகபட்சம் அவளின் கையோடு கை கோர்த்து அணைத்திருத்திருக்கிறேன் அவ்வளவு தான்.
மீண்டும் அவளோடு 12→
இன்று அவளை முத்தமிட போகிறேன். அதுவும் உதடோடு உதடு வைத்து உதட்டு முத்தமிட போகிறேன் என்பதால் என்னவோ என்னையும் அறியாமல் என் உதடு துடித்த ஆரம்பித்தது. அது துடித்தது அச்சத்திலா? அல்லது ஆர்வத்திலா? என அப்போதைக்கு தெரியவில்லை.
ஒரு வழியாக என் உதட்டை அவளின் உதட்டோடு நன்றாக அழுத்தமாக ஒட்டி எடுத்தாற் போல் என் முதல் முத்தத்தை பிறந்தநாளில் அவளுக்கு குடுத்தேன். அதை மதியும் எதுவும் சொல்லாமல் ஏற்றுக் கொண்டது தான் மிக பெரிய சந்தோஷம்.
அவளின் உதட்டில் இருந்து என் உதட்டை எடுக்கும் போது இருவரின் முகம் வியர்த்து விறுவிறுத்து இருந்தது. அப்போதைக்கு இருந்த மகிழ்ச்சியில் அதை பற்றி பெரிதாக கவலைபடவில்லை. மதி உதடு என் எச்சில் பட்டு பளபளப்பாக மின்னிக் கொண்டிருப்பதை அந்த வெயிலிலும் பார்க்க முடிந்தது.
அவளின் உதட்டை அப்படி பார்த்ததும் அவளிடம் இருக்கும் உரிமையில் கேட்காமலே அடுத்த முறை இன்னும் ஆழமாக மற்றும் அழுத்தமாக என் உதட்டை பதித்து அவளின் உதட்டை கவ்வி உறிஞ்சி முத்தமிட்டேன்.. இந்த முறை கொஞ்சம் அதிகமாக நேரம் எடுத்துக் கொண்டு அவளின் உதட்டை ‘போதும் போதும்’ என்ற அளவிற்கு கவ்வி உறிஞ்சி முத்தமிட்டேன்..
ஒரு கட்டத்திற்கு மேல் மதியே என்னை விலக்கி அவளின் உதட்டை என்னிடம் இருந்து பிடுங்கி கொண்டாள்.. அவளை மிகவும் சந்தோஷ முகத்துடன் பார்க்க அவளுக்கோ வியர்த்து மூச்சு வாங்கியது. பையில் இருந்த வாட்டர்கேனை எடுத்து தண்ணீர் குடித்து விட்டு என்னிடம் எதுவும் சொல்லாமலே சைக்கிளை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டாள்..
நான் கூப்பிட கூப்பிட காதில் வாங்காமல் சைக்கிளை ஓட்டிக் கொண்டு சென்றாள்..
அவள் சென்ற பிறகு எனக்கு எந்த வேலையும் ஓடவில்லை. எதற்காக அப்படி சென்றாள் கூட தெரியாமல் அப்படியே பைத்தியம் பிடித்தது போல் இருந்தேன். திரிந்தேன்.. அன்று மாலை வரை எந்த ஒரு வேலையும் செய்ய பிடிக்காமல் இருந்தேன்..
அன்று மாலை வழக்கம் போல அவளின் பள்ளிக்கு எதிரில் அவளின் வருக்கைக்காக காத்திருந்தேன். மதியும் பள்ளி முடிந்து வெளியே வந்தாள். ஆனால் என்னை பார்த்தும் பார்க்காதது போல் சென்றுவிட்டாள். இந்த ஒரு வருடத்தில் இது மாதிரி எப்போதும் நடந்ததில்லை.
அவளின் செய்கைகள் எல்லாம் ஆச்சரியமாக இருந்தது. அவளின் பின்னாலே நானும் சைக்கிளை எடுத்துக் கொண்டு சென்றேன். அவளின் தோழி பிரிந்து செல்லும் வரை எதுவும் கூப்பிடாமல் பேசாமல் அவளின் பின்னாலே சென்றேன்..
அவளின் தோழி பிரிந்து சென்றதும் அவளுக்கு முன்பாக போய் சைக்கிளை நிறுத்தினேன். நான் திடீரென சைக்கிளை கொண்டு போய் நிறுத்தியதும் அவளும் உடனடியாக பிரேக் போட்டு சைக்கிளை நிறுத்தினாள்..
“ஏய் மதி உனக்கு என்ன ஆச்சு. ஏன் எதுவும் பேசமாட்ற.?”
“இன்னும் என்ன ஆகனும் நெனக்கிறிங்க?”
“ஏன் என்ன நடந்துச்சு சொன்ன தான தெரியும்?”
“என் வீட்டுக்கு போன தான் தெரியும்?”
“உன் வீட்டுக்கு போன தான் தெரியுமா?”
“ஏன் அப்படி சொல்ற?”
“காலையில நாம ஒன்னா இருக்கிறத அந்த முக்கு சந்து முனியாண்டி பொண்டாட்டி பாத்திட்டா நெனக்கிறேன்..
இந்நேரம் என் வீட்டுல போய் சொல்லியிருப்பா? என்ன நடக்கும் நெனச்சாலே பயமாக இருக்கு” ஒரு பதற்றத்துடனே சொன்னாள் மதி..
“இதுக்கா மதி காலையில சொல்லாம கோவிச்சிட்டு போன..”
“ஓ.. இது உங்களுக்கு சாதாரணமா தா தெரியும் ஏன்னா நீங்க ஆம்பளைங்க.. உங்கள எதுவும் சொல்லமாட்டாங்க.. ஆனா என்னைய அப்படியா? பேச்சாலே பேசி பாதி சாவடிச்சுடுவாங்க” என்றாள்..
“ஏய் என்ன மதி இப்படி பிரிச்சு பிரிச்சு பேசுற.. நீ வேற நா வேறயா? உன் மேல அக்கறை இல்லாமையா இருந்து இருக்கேன். நீயே சொல்லு..”
“நா உங்கள கொற சொல்லல.. ஆனா யாருக்கும் தெரியாம காதலிக்குறது எவ்வளவு கஷ்டம் எனக்கு தான் தெரியும். ஒவ்வொரு தடவ நாம சந்திச்சு பேசுறப்ப அவ்வளவு பயம் இருக்கும்.. ஒரு நிம்மதியா கூட பேச முடியாது தெரியுமா?”
“நாம தான் யாருக்கும் தெரியாம தான் பேசுறேன். பின்ன ஏன் இப்படி பயப்புடுற?”
“இன்னிக்கு காலையில அவ பாத்திருப்பா எனக்கு தோணுது..”
“அதலாம் பாத்திருக்கமாட்டா.. அவ நீ சைக்கிளை எடுத்துட்டு போனதும் போனவ தான். இன்னும் ஊருக்குள்ள வரல.. ஏதோ ஊருல இருக்குற அவ அம்மாக்கு முடியல ஊருக்குள்ள பேச்சிக்கிட்டாங்க..”
“நிசமாவா சொல்றீங்க.?”
“ஆமா உன் மேல சத்தியமா?” சொல்லி அவளின் தலையில் கை வைத்து சத்தியம் செய்தேன்…
அவளின் தலையில் கை வைத்து சத்தியம் செய்ததும் அவளின் முகத்தில் இதுவரை இல்லாமல் இருந்த அந்த சந்தோஷம் இப்போது வந்து ஒட்டிக் கொண்டது. இப்போதும் எதுவும் சொல்லாமல் அவளின் சைக்கிளை ஓட்டினாள்..
“ஏய் மதி அதான் எந்த பிரச்சினையும் இல்லைல.. இப்பவும் எதுவும் சொல்லாம போற..” கேட்டதற்கு கண் சைகையாலே பின்னாடி வர சொன்னாள்.. அவளிடமிருந்து பதில் கிடைத்த மகிழ்ச்சியில் நானும் ஒரு நாய்க்குட்டி மாதிரி பின்னாடியே சென்றேன்..
அவளின் சைக்கிள் கடைசியாக காலையில் நாங்கள் சந்தித்த இடத்தில் போய் நின்றது. அவள் சைக்கிளை விட்டு இறங்கி நின்றாள். அவள் நின்றதை பார்த்ததும் நானும் வேகமாக சைக்கிளை விட்டு இறங்கி அவளின் பக்கத்தில் போய் நெருங்கி நின்றேன். ஆனால் அவளை தொடவில்லை.. இருவரும் அமைதியாக ஒருத்தரின் முகத்தை மாறி மாறி காதலாக பார்த்துக் கொண்டோம்..
மதி தான் என் தலை முடியை கலைத்து மீண்டும் என் நெற்றியில் தன் உதட்டை பதித்து முத்தமிட்டாள்.. அவளின் உதட்டை நெற்றியில் இருந்து எடுத்ததும் அவளை பார்த்து சிரித்தேன். அவளும் சிரித்தாள்.
பின் என்ன நினைத்தாளோ தெரியவில்லை என்னை கட்டியணைத்து முகமெங்கும் தன் அழகிய உதட்டை பதித்து இடைவெளி இல்லாமல் முத்தமிட்டாள். இவ்வளவு முத்ததிலும் ஒருமுறை கூட அவளின் உதடு என் உதட்டில் படவேயில்லை.. உதட்டை தவிர மற்ற இடங்களில் தான் முத்தமிட்டாள்..
“ஏய் மதி..” கூப்பிட்டதும் என்னை பார்த்து புருவத்தை தூக்கி என்ன கேட்டாள்..
“என் உதடு பிடிக்காத உனக்கு”
“ஏன் அப்படி கேக்குறீங்க..?”
“இல்ல என் உதட்ட தவிர மத்த இடத்துல தான் உன் உதடு படுது.. அதான் ஒருவேளை என் உதடு” சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவள் பாய்ந்து வந்து உதட்டை கவ்வி பிடித்து என் உதட்டில் முத்தமிட்டாள். அவளுடன் நானும் சேர்ந்து அவளின் அந்த அழகிய உதட்டை உறிஞ்சியபடி அவளை இறுக்கமாக கட்டியணைத்து இருந்தேன். இருவருக்கும் மூச்சு வாங்கும் வரை எங்களின் முத்த சண்டையை நிறுத்தவே இல்லை.
இருவரும் பிரிந்து முகத்தை காதலாக மாறி மாறி பார்த்துக் கொண்டோம்.. அவளின் கட்டியணைத்திருந்த பிடியை இன்னும் விடாமல் தான் இருந்தேன்..
அவளின் முகத்தில் வழிந்த வியர்வையை நுனி நாக்கை வைத்து நக்க அவள் வெட்கபட்டு முகத்தை திருப்பி கொண்டாள்.. அவளின் கழுத்தில் வழிந்த வியர்வை நாக்கை வைத்த நக்க இந்தமுறை கூச்சத்தால் என்னை விட்டு விலகி நின்றாள்… அவளை பிடித்து இழுத்து திரும்பி அணைத்துக் கொண்டேன்..
“ஏய் மதி.. உன் வியர்வை கூட அவ்வளவு இனிப்பா இருக்குடி..” சொல்லிக் கொண்டே அவளின் வயிற்றை சுற்றி வளைத்து பிடித்திருந்தேன்..